CSK : பிராவோ அங்கிள் தொப்பியை இப்படி போடக்கூடாது தப்பு என்று கூறிய தோனியின் மகள் – வீடியோ

தோனிக்கு இருப்பது போன்று அவரது மகள் ஜிவா தோனிக்கும் தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தோனியின் மகள் செய்யும் குட்டி குட்டி குறும்பு செயல்கள் கூட இணையத்தில் ஹிட்

Ziva
- Advertisement -

தோனிக்கு இருப்பது போன்று அவரது மகள் ஜிவா தோனிக்கும் தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தோனியின் மகள் செய்யும் குட்டி குட்டி குறும்பு செயல்கள் கூட இணையத்தில் ஹிட் அடிக்கும். அந்த அளவிற்கு அடிக்கடி சேட்டையான செயல்களை செய்துவருகிறார். தற்போது நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின்பு பிராவோவிடம் விளையாடிய தோனியின் மகள் பிராவோ அங்கிள் நீங்கள் தொப்பியை தவறாக அணிந்துள்ளீர்கள் மாற்றி போடுங்கள் என்று கூறுகிறார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 29 ஆவது போட்டி நேற்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணிகளும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது சென்னை அணி. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் துவக்க வீரரான க்றிஸ் லின் 51 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.

அடுத்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரெய்னா 42 பந்துகளில் 58 ரன்களும், ஜடேஜா 17 பந்துகளில் 31 ரன்களையும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த போட்டியில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய சென்னை அணியின் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement