தோனியை உற்சாகப்படுத்திய தல தோனியின் செல்ல மகள் – வீடியோ

Ziva
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 5ஆவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி மோதியது. அணி இரண்டாவது பேட்டிங் செய்யும் போது 5ஆவது ஆட்டக்காரராக தோனி களமிறங்கினார். அப்போது மைதானத்தில் இருந்த தோனியின் மகள் தோனியை உற்சாகப்படுத்தும் வகையில் கத்தினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனியின் மகள் தோனி விளையாடும் அனைத்து ஐ.பி.எல் போட்டிகளையும் பார்த்து வருகிறார். மேலும் மைதானத்தில் அவர் எது செய்தாலும் ஹிட் அடிக்க தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. இதனால் சென்னை அணிக்கு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Iyer

பிறகு ஆடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 150 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் வாட்சன் 26 பந்துகளை சந்தித்து 44 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். மேலும், சென்னை அணியின் கேப்டன் தோனி 35 பந்துகளில் 32 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

Advertisement