ஏற்கனவே சம்பளம் வாங்காம விளையாடுறோம். ப்ளீஸ் எங்களுக்கு உதவி பண்ணுங்க – ஐ.சி.சி யிடம் முறையிட்ட அணி

Zimbabwe
- Advertisement -

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு இருப்பதன் காரணமாக ஜிம்பாப்வே அணியை ஐசிசி உறுப்பினர் நாடுகளில் இருந்து நீக்கியது. ஐசிசியின் விதிமுறைகளை மீறியதால் ஜிம்பாப்வே அணிக்கு எந்த நன்கொடையும் இனி வழங்கப்படாது. மேலும் ஐசிசி உடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படுவதோடு, அவர்களின் போட்டியில் பங்கேற்க தடை விதித்தது ஐசிசி.

Zimbabwe 1

- Advertisement -

ஆனால் ஐசிசி சம்பந்தப்பட்ட போட்டிகளை தவிர இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியில் ஜிம்பாப்வே கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியோடு அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட உள்ளது.

ஆனால் ஐசிசியிடம் நன்கொடை பெற்ற நாட்களிலேயே அந்த அணி வீரர்களுக்கு சரியான சம்பளம் கிடைக்கப்படவில்லை. இந்நிலையில் அவர்களுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சம்பளம் இல்லாமல் விளையாட வேண்டிய நிலை உண்டாகி உள்ளது. ஏற்கனவே நெதர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலேயே ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை.

Zimbabwe 2

இந்நிலையில் அந்த அணியின் வீரர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டும், அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் icc மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த அணியின் வீரர்கள் ஐ.சி.சி இடம் வேண்டுகோள் வைத்துள்ளனர். இதற்கு ஐ.சி.சி என்ன முடிவு எடுக்க போகிறது என்று பொருத்து இருந்து பார்த்தால் தான் தெரியும்.

Advertisement