- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ZIM : கடைசி நேரத்துல அவங்க 2 பேரும் பிரமாதமா ஆடுனாங்க – ஜிம்பாப்வே கேப்டன் பாராட்டு

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது 2-0 என்ற கணக்கில் தொடரினை கைப்பற்றிய வேளையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஹராரே நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 130 ரன்களும், இஷான் கிஷன் 50 ரன்களும் குவித்து அசத்தினார்கள். பின்னர் 290 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்று இந்த ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. ஜிம்பாப்வே அணி சார்பாக சிக்கந்தர் ராசா 115 ரன்கள் அடித்து அசத்தார்.

இந்நிலையில் இந்த தொடரில் அடைந்த தோல்விக்கு பின்னர் பேசிய ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கூறுகையில் : முதலில் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே அவர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

இருப்பினும் எங்கள் அணியில் சிக்கந்தர் ராசா மற்றும் பிராட் எவன்ஸ் ஆகியோர் மிகச் சிறப்பாக போராடினார்கள். இருந்தாலும் இந்திய பவுலர்கள் கடைசி நேரத்தில் பொறுமையை இழக்காமல் விளையாடி வெற்றியை பெற்றனர். எங்களது அணியின் பந்துவீச்சும் இந்த போட்டியில் சிறப்பாகவே இருந்தது. ஆனாலும் இந்திய வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்து விட்டார்கள்.

இதையும் படிங்க : நான் அவருடைய ரசிகன் – இளம் இந்திய வீரரின் ஜெர்ஸியை வாங்கிய இளம் ஜிம்பாப்வே வீரர் பூரிப்புடன் பேசியது இதோ

சிக்கந்தர் ராசா மீண்டும் ஒருமுறை சிறப்பான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தினார். நிச்சயம் இந்த போட்டியில் இருந்து நல்ல விடயங்களை எடுத்துக்கொண்டு இனிவரும் தொடர்களில் நல்ல கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம் என ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by