ZIM vs AUS : 3 ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாறு படைத்த ஜிம்பாப்வே – நடந்தது என்ன?

ZIM
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே அணியானது அந்நாட்டிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டு வெற்றிகளுடன் தொடரினை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் மூன்றாம் தேதி இன்று நடைபெற்று முடிந்தது.

ZIMvsAUS

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசியது. இப்படி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பந்து வீசிய ஜிம்பாப்வே அணியானது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 31 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணியை 141 ரன்களில் சுருட்டியது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் ஒருபுறம் 96 பந்துகளில் 94 ரன்களை குவித்தாலும் மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

- Advertisement -

மேக்ஸ்வெல் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 19 ரன்களை குவிக்க வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரை தவிர்த்து மீதி ஒன்பது வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டம் இழந்தனர். அதிலும் குறிப்பாக அந்த ஒன்பது வீரர்களில் யாரும் ஐந்து ரன்களை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ryan Burl

ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரயான் பர்ல் மூன்று ஓவர்கள் வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை சாய்த்தார். பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 39 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி பெற்ற இந்த வெற்றி அவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. அதோடு மட்டுமின்றி புதிய வரலாற்று சாதனையையும் ஆஸ்திரேலிய மண்ணில் நிகழ்த்திய ஜிம்பாப்வே அணியானது அசத்தியுள்ளது. அதன்படி இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் ஜிம்பாப்வே அணி ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெற்றது கிடையாது. இந்நிலையில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அவர்களது மண்ணிலேயே முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : கேப்டனாக களமிறங்கும் சச்சின் டெண்டுல்கர் – லெஜெண்ட்ஸ் தொடரின் 8 அணி வீரர்கள், தேதி, மைதானங்கள் இதோ

ஆஸ்திரேலிய மண்ணில் இன்னும் சில வாரங்களில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ள இவ்வேளையில் அந்த அணி பெற்ற இந்த பெரிய வெற்றி அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement