- Advertisement -
உலக கிரிக்கெட்

என்னடா ஆஸ்திரேலியாவுக்கு வந்த சோதனை.. தண்ணி காட்டிய ஜிம்பாப்வே – முதல் அட்டகாசமான அப்செட்

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் பெரிய அணிகளுக்கு போட்டி அளிக்கும் வகையில் சிறிய அணிகளும் அட்டகாசமான வகையில் விளையாடி வருகின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வே :

அந்த வகையில் பிப்ரவரி 13-ஆம் தேதியான இன்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணியின் சிறப்பான செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது.

பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக 23 ரன்கள் வித்யாசத்தில் ஜிம்பாப்வே அணி அசத்தலான வெற்றியை ருசித்தது.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அசத்தினாலும் வாய்ப்பு கிடையாது – சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்டுள்ள நிலை

இந்த உலக கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக சிறிய அணிகள் மிகச் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக அதிரடியாக விளையாடக் கூடிய ஆஸ்திரேலிய அணியை ஜிம்பாப்வே வீரர்கள் மடக்கிய விதம் போட்டியை மேலும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -