- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த இந்திய வீரரின் ஸ்டைலை பின்பற்றி.. இந்தியாவை டெஸ்ட் தொடரில் சாய்ப்போம்.. வங்கதேச வீரர் நம்பிக்கை

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை ஒயிட் வாஷ் செய்து வென்ற இந்திய அடுத்ததாக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதைத் தொடர்ந்து தாயகம் திரும்பும் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் இந்தியா தங்களின் சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காமல் மிரட்டி வருகிறது. எனவே அந்தத் தொடரிலும் வங்கதேசத்தை எளிதாக தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் அந்த தொடரில் புஜாராவின் ஸ்டைலை பின்பற்றி இந்தியாவில் வீழ்த்துவோம் என்று வங்கதேச வீரர் ஜாகிர் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

புஜாரா ஸ்டைல்:
குறிப்பாக அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை கலைப்படையை வைக்கும் புஜாரா பெரிய ரன்கள் குவித்து வெற்றியை பெற்று கொடுக்கும் ஸ்டைலை கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே அது போன்ற ஸ்டைலை இந்திய தொடரில் வங்கதேசமும் பின்பற்ற முயற்சிக்கும் என்று தெரிவிக்கும் ஜாகிர் ஹசன் இதைப் பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“கண்டிப்பாக அந்த அணுகு முறை எங்கள் அணியில் இருக்கும். என்னைப் பொறுத்த வரை அது உங்கள் அணியின் பலம் என்ன, யுக்தி என்ன என்பதை பொறுத்து அமையும். இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட்டுபவர்களின் பங்கு முற்றிலும் வேறுபட்டது. இருப்பினும் புஜாராவிடம் மட்டுமே அந்தத் திறன் உள்ளது. அதாவது அவர் நீண்ட நேரம் விளையாடி பவுலர்களை சோர்வடையச் செய்வார்”

- Advertisement -

“அவருடைய திறமையை ஒட்டுமொத்த அணியும் நம்புகிறது. எங்கள் அணியில் எங்களாலும் அது போன்ற வழி முறைக்கு உட்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் என்னைக் கேட்டால் நான் புஜராவை போல் விளையாடுபவன் கிடையாது. இருப்பினும் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டுமெனில் நான் கொஞ்சம் நேரம் எடுத்து அதை கட்டமைக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அதுக்காக கவலைப்படல.. 2வது போட்டியில் எங்க ஆட்டத்துல மாற்றத்தை பார்ப்பீங்க.. கேப்டன் ரோஹித் பேட்டி

முன்னதாக 26 வயதாகும் ஜாகிர் ஹசன் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 455 ரன்கள் குவித்துள்ளார். அந்த வகையில் பெரிய அனுபவத்தைக் கொண்டிராத அவர் இந்தியாவுக்கு எதிராக அசத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். குறிப்பாக சொந்த மண்ணில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் போன்ற தரமான ஸ்பின்னர்களை தாண்டி அவரால் அசத்த முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

- Advertisement -