இந்திய கேப்டன் சுப்மன் கில் சொன்னது 90 நிமிட நாடகம் பொய்.. நாங்க செஞ்சது நியாயம் தான்.. கிராவ்லி பதிலடி

Zak Crawley
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முன்னதாக அத்தொடரின் 3வது போட்டியின் 3வது நாள் மாலையில் இங்கிலாந்து 2 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

அப்போது இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஜாக் கிராவ்லி – பென் டக்கெட் ஆகியோர் நேரத்தை வீணடிப்பதற்காக வேண்டுமென்றே தாமதமாக களத்திற்கு வந்தார்கள். அத்துடன் பும்ராவுக்கு எதிராக சில பந்துகளை எதிர்கொண்ட கிராவ்லி சைடு ஸ்கிரீன் அசைவதாக சொல்லி நேரத்தை தாமதப்படுத்தினார். அதற்கடுத்த சில பந்துகளில் அவருடைய கையில் லேசாக மட்டுமே பந்து பட்டது.

- Advertisement -

90 நொடிகள் தாமத நாடகம்:

ஆனால் அதைப் பெரிய காயத்தைப் போல் வெளிப்படுத்திக் கொண்ட அவர் இங்கிலாந்து அணியின் மருத்துவரை வரவழைத்து நேரத்தை வீணடித்தார். அப்படி 3வது முறை நேரத்தை தாமதப்படுத்தியதால் கோபமடைந்த இந்திய கேப்டன் கில் அவரிடம் சில மோசமான வார்த்தைகளை சொல்லி வாக்குவாதம் செய்தார். அதே போல இந்திய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை சூழ்ந்து பதிலடி கொடுத்தனர்.

கடைசியில் அதுவே இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுத்ததாக இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தெரிவித்தார். அத்துடன் எங்களுடைய 2 வீரர்களை சீண்டினால் மொத்த 11 இங்கிலாந்து வீரர்களும் வந்து பதிலடி கொடுப்போம் என்றும் அவர் எச்சரித்தார். அதன் காரணமாக அந்தத் தேவையற்ற வாக்குவாதத்தை செய்த கில்லை நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

கிராவ்லி மறுப்பு:

அந்த நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 20, 30 அல்ல முழுமையாக 90 நொடிகள் தாமதப்படுத்தியதாலேயே கோபப்பட்டதாக 4வது போட்டிக்கு முன் கில் தெரிவித்தார். அது நேர்மைத்தன்மைக்கு உட்பட்டதில்லை என்பதாலேயே வாக்குவாதம் செய்ததாகவும் அவர் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் கில் சொல்வது பொய் என்று தெரிவிக்கும் ஜாக்ரவ்லி புதிதாக கொடுத்துள்ள பதிலடி பின்வருமாறு.

இதையும் படிங்க: சொல்றதுக்கே கஷ்டமா தான் இருக்கு.. பும்ராவுக்கு இப்படி ஒரு நிலைமையா? – அப்போ இந்த போட்டியும் லாஸ் தான்

“இல்லை, அதை வேண்டுமென்று செய்யவில்லை. நடுவர்கள் மைதானத்திற்குள் செல்லும் வரை நான் என்னுடைய இடத்தில் அமர்ந்திருந்தேன். நடுவர்கள் செல்லத் துவங்கும் போது நானும் அவர்களுடைய பின்னே நடந்தேன். 90 நொடிகள் தாமதமானது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் போதுமானளவு நியாயமானது. அதே சமயம் அந்தப் போட்டியான கிரிக்கெட்டை நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன்” என்று கூறினார். மேலும் தாங்கள் வாக்குவாதம் செய்த போதிலும் நேர்மைத்தன்மையையும் எல்லைக்கோட்டையும் தாண்டவில்லை என்று கிராவ்லி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement