சொல்றதுக்கே கஷ்டமா தான் இருக்கு.. பும்ராவுக்கு இப்படி ஒரு நிலைமையா? – அப்போ இந்த போட்டியும் லாஸ் தான்

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது மான்செஸ்டர் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 23-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்த வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

விக்கெட் எடுக்க முடியாமல் திணறிவரும் ஜஸ்ப்ரீத் பும்ரா :

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பண்ட் 54 ரன்களையும் குவித்தனர். பின்னர் தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது மூன்றாம் நாள் தேநீர் இடைவேளை வரை 4 விக்கெட்டுகளை இழந்து 433 ரன்களை குவித்துள்ளது.

- Advertisement -

இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். அவரை தவிர்த்து பென் டக்கெட் 94 ரன்களையும், ஜாக் கிராவ்லி 84 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். தற்போதைய நிலையில் 75 ரன்கள் முன்னிலையுடன் இருக்கும் இங்கிலாந்து அணியானது இன்னும் 6 விக்கெட்டுகளை கைவசம் வைத்திருப்பதால் மிகப்பெரிய முன்னிலையை பெற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக இந்திய அணி தற்போது பரிதாப நிலையை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்தியாவில் வெற்றிக்கு தூணாக இருப்பார் என்று பார்க்கப்பட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருவதும் நமது அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் :

- Advertisement -

இதுவரை எந்த ஒரு போட்டியிலும் நிலை தடுமாறாமல் குறிவைத்த இடத்தில் பந்துவீசி வந்த பும்ரா முதல் முறையாக லைன் மற்றும் லென்த்தை தவறவிட்டு மோசமான பந்துகளை வீசி வருகிறார். அதுமட்டும் இன்றி துல்லியமாக யார்க்கர் மற்றும் பவுன்சர்களை வீசும் பும்ரா தற்போது தொடர்ச்சியாக பேட்ச்மேன்களின் கால் பகுதியிலேயே பந்துவீசி நிறைய பவுண்டரிகளை விட்டுக் கொடுத்துள்ளார். இப்படி பும்ரா விக்கெட் எடுக்க தடுமாறியதை கடந்த சில ஆண்டுகளில் நாம் பார்த்தது கிடையாது.

இதையும் படிங்க : 15 பேர் வந்து ஆடிட்டாங்க.. பாவம் இன்னும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கல.. அபிமன்யு ஈஸ்வரனுக்கு – நேர்ந்த சோகம்

ஆனால் இந்த போட்டியில் அவர் இப்படி மிகப்பெரிய அளவில் தடுமாறி வருகிறார். அதுமட்டும் இன்றி இந்த போட்டியின் போது அவ்வப்போது ஓய்வறைக்கு சென்று வரும் அவர் அடிக்கடி கணுக்காலை பிடித்துக் கொண்டு சிரமப்படுவதால் வேகத்தை குறைத்தும் பந்துவீசி வருகிறார். அதனால் ஏற்கனவே கூறப்பட்டது போன்று அடுத்த போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்பது உறுதி.

Advertisement