- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ரா என்னிடம் இருந்து தான் அந்த வித்தையை கத்துக்கிட்டாரு – யு.ஏ.இ வீரர் அளித்த பேட்டி

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் உலகின் தலைசிறந்த பவுலராக இருந்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் முக்கிய வெற்றிகளில் பங்காற்றி வரும் பும்ரா அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 4 ஓவர்கள் வீசி அவர் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு நான் தான் அந்த விதையை கத்துகுடுத்தேன் : ஜாஹுர் கான்

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதோடு முன்னாள் வீரர்கள் பலரும் ஆல் டைம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றால் அது ஜஸ்ப்ரீத் பும்ரா தான் என்று கூறி வருகிறார். அந்த அளவிற்கு தன்னுடைய கூர்மையான யார்க்கர் மற்றும் சமயோகித பந்துவீச்சின் மூலம் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணற வைத்து வருகிறார். அவரிடம் இருக்கும் வேரியேஷன்கள் எதிரே இருக்கும் பேட்ஸ்மேன்களை வீழ்த்தும் வகையில் அமைந்து வருவதாலே அவரது பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் தடுமாறு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ரா ஸ்லோயர் பந்துகளை வீசும் வித்தையை தன்னிடம் இருந்துதான் கற்றுக் கொண்டதாக யு.ஏ.இ அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாஹுர் கான் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கடந்த 2019 ஆம் ஆண்டு நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் நெட் பவுலடராக இருந்தேன். அப்போதுதான் ஸ்லோவர் பந்துகளை வீசும் வேரியேஷன்களை என்னுடன் இருந்து அவர் கற்றுக் கொண்டார்.

பும்ரா இதற்கு முன்னதாக மெதுவான பந்துகளை வீசுவார். ஆனால் அவருடைய வழக்கமான ஆக்ஷனில் தான் வீசுவார். பின்னர் நான் மும்பை அணிக்காக வலைப்பயிற்சியில் பந்து வீசும் போது என்னை அழைத்த அவர் உங்களிடம் இருந்து நான் ஸ்லோவர் பந்துகளை வீச கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். அதன் பின்னர் நான் வலைப்பயிற்சியின் போது ஸ்லோவர் பந்துகளை எவ்வாறு வீசவேண்டும்? என்பது குறித்தும் ஸ்லோவர் பந்துகளை வீசும் போது எவ்வாறு அதை பவுன்சராக வீச வேண்டும்? என்பது குறித்தும் அவருக்கு சில ஆலோசனைகளை கொடுத்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அபிஷேக் சர்மாவுக்கு – ஏற்பட்டுள்ள ஆபத்து

அந்த வகையில் அவர் என்னிடம் இருந்து ஸ்லோவர் பந்துகளை வீசும் வித்தை கற்றுக் கொண்டார் என ஜாகூர் கான் கூறியது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் நாடான யு.ஏ.இ அணியின் பந்துவீச்சாளர் இப்படி ஒரு திடீர் கருத்தை வெளியிட்டுள்ளது பலரது மத்தியில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -