இந்திய அணியில் ரஹானே விளையாடுவாரா ? மாட்டாரா ? – ஜாஹீர் கான் கொடுத்த விளக்கம்

Zaheer
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5வது போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி நாளை மான்செஸ்டர் நகரில் உள்ளது.

indvseng

- Advertisement -

இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள இவ்வேளையில் நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணி எது ? என்பது மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் கடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளாக சொதப்பி வரும் ரஹானேவிற்கு மாற்று வீரராக யார் தேர்வு செய்யப்படுவார் ? என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் இந்திய அணியில் ரஹானே விளையாடுவார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாகிர் கான் கூறுகையில் : கடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை பார்க்கும்போது ரகானே இந்திய அணியில் விளையாடுவார் என்றே தோன்றுகிறது.

Rahane-1

மேலும் சரியான பார்மில் இல்லாத ஒரு வீரருக்கு மீண்டும் நம்பிக்கை கொடுக்கும் விதமாக அவர் அணியில் இருக்கலாம் அதனால் அவருக்கு வாய்ப்பு வழங்க இந்திய நிர்வாகம் தயாராக இருக்கலாம் அப்படி இருந்தால் நிச்சயம் ரஹானே நாளைய போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது. அதேவேளையில் இந்திய அணியின் பவுலர்களை மாற்றுவதின் மூலம் பவுலிங்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Rahane 1

ஆனால் பேட்டிங்கில் இதுவரை மாற்றம் பெரிய அளவில் ஏற்படவில்லை. இதன் காரணமாக ரகானே நிச்சயம் 5வது போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்று ஜாஹீர் கான் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த 4 போட்டிகளின் முடிவில் ரகானே 109 ரன்களை மட்டுமே அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement