ஷ்ரேயாஸ் ஐயர் 4 ஆவது வீரராக விளையாடினால். அது பண்டுக்கு நல்லது – ஜாஹீர் கான் விளக்கம்

Zaheer

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையின் காரணமாக தடைபட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பதால் நாளைய போட்டி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

iyer

இந்நிலையில் இந்திய அணியின் நான்காம் நிலை வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது : ஸ்ரேயாஸ் அய்யர் இரண்டாவது போட்டியின்போது சிறப்பாக ஆடினார். மேலும் இனி வரும் ஆட்டங்களில் அவரை இந்திய அணி 4-வது வீரராக களமிறங்கி பரிசோதிக்க வேண்டும்.

ஏனெனில் அவரிடம் நல்ல திறமை உள்ளது. அணியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆடும் தன்மையும் அவரிடம் உள்ளது. எனவே அவர் தொடர்ந்து நான்காவது வீரராக சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கையும் என்னிடம் உள்ளது. தற்போது அவரை வைத்து நான்காவது இடத்தை பரிசோதிக்கும் நேரம், அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பண்டிற்கு அது சிறப்பான அடித்தளத்தை அமைக்கும்.

Iyer

ஏனெனில் ரிஷப் பண்ட் ஆக்ரோசமாகவும், அதிரடியாகவும் ஆடக்கூடிய வீரர் எனவே அவரது அதிரடிக்கு 40 ஓவர்களுக்கு மேல் அவர் பேட்டிங் இறங்கும் பட்சத்தில் அவரால் சிறப்பாக ரன்களை குவிக்க முடியும். எனவே பண்டை 5 அல்லது 6 ஆவது இடத்திலும், ஐயரை நான்காம் இடத்தில் இறக்குவது சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன் என்று ஜாஹீர் கான் கூறினார்.

- Advertisement -