கேப்டன் பதவி வேணாம்.. தற்போதைக்கு இதை பர்ஸ்ட் சாதியுங்க.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு – ஜாஹீர் கான் அட்வைஸ்

Zaheer and Shreyas
- Advertisement -

கடந்த 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை ஷ்ரேயாஸ் ஐயர் வென்றிருந்தாலும் கொல்கத்தா அணி அவரை அந்த ஆண்டுடன் விடுவித்தது. அப்படி ஷ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றதிலிருந்து கொல்கத்தா அணி மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் தனிப்பட்ட முறையில் எங்கேயோ உயர்ந்து நிற்கிறார்.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஜாஹீர் கான் வழங்கிய அறிவுரை :

கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கேப்டன்சி செய்து வரும் வேளையில் கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை கொண்டு சென்ற ஷ்ரேயாஸ் ஐயர் இந்த 2026 ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். இதுவரை நடைபெற்று முடிந்த முடிந்துள்ள ஆறு போட்டியிலும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் ஐ.பி.எல் போட்டிகளில் அசத்திய வரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய டி20 அணியின் கேப்டனாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. ஏனெனில் தற்போது சூரியகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பதாலும், அவருக்கு 35 வயதாவதாலும் சூரியகுமார் யாதவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக மாற்ற வேண்டும் என்று பலரும் பேசி வருகின்றனர்.

இவ்வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டி20 அணிக்குள் வருவதைத்தான் எதிர்பார்க்க வேண்டும் என்றும் கேப்டனாக மாறுவது குறித்து யோசிக்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாகிர் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஷ்ரேயாஸ்க்கு தற்போது முதல் நோக்கமாக டி20 அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் அவர் கேப்டன் பதவியை பற்றி யோசிக்கிறாரா? என்று எனக்கு தெரியாது.

- Advertisement -

இதையும் படிங்க : கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் சாதனையை முறியடித்த – பஞ்சாப் கிங்ஸ்

ஆனால் நிச்சயம் வெகு விரைவில் அவர் கேப்டனுக்கான போட்டியாளராக இருப்பார். தற்போது இந்திய டி20 அணியில் பலமான போட்டி நிலவுவதால் அவர்களுடன் போட்டியிட்டு முதலில் இடத்தை பிடிப்பதற்காகவே அவர் முயற்சி செய்ய வேண்டும். பிறகு கேப்டன் பதவியை பார்த்துக் கொள்ளலாம் என ஜாகிர் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement