கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் சாதனையை முறியடித்த – பஞ்சாப் கிங்ஸ்

PBKS
- Advertisement -

மொத்தம் 10 அணிகளுடன் கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய 19 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 30-வது லீக் போட்டியானது இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த தொடரில் அனைத்து அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படுவதால் நடைபெற்று வரும் ஒவ்வொரு போட்டியுமே மிகச்சிறப்பான பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய அசத்தல் சாதனை :

பஞ்சாப் கிங்ஸ் அணியானது கடந்த ஆண்டு 2025 ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இந்த 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தங்களது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 6 போட்டிகளில் அவர்கள் 5 வெற்றி மற்றும் ஒரு போட்டி மழையினால் முடிவில்லாமல் போனதாலும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்த தொடரில் தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து ஐபிஎல் வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதாவது ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் தொடர்ந்து தோல்வியை சந்திக்காமல் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இருந்தன. அதுவே இதுவரை தோல்வியை சந்திக்காமல் அதிக போட்டிகளில் ஒரு சீசனில் வென்ற எண்ணிக்கையாக சாதனையாக இருந்து வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த ஐ.பி.எல் தொடரில் தனது மோசமான பவுலிங் பார்ம் குறித்த கேள்விக்கு பதிலடி கொடுத்த – வருண் சக்கரவர்த்தி

இந்நிலையில் தற்போது அந்த சாதனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ள பஞ்சாப் அணி நேற்று நடைபெற்றுள்ள போட்டியோடு சேர்த்து முதல் ஆறு போட்டியில் தோல்வியை சந்திக்காமல் ஒரு ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதோடு இந்த சீசனில் கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கும் அணிகளில் ஒன்றாகவும் பஞ்சாப் கிங்ஸ் அணி பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement