இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரில் ஏகப்பட்ட மாற்றங்கள் இந்திய அணியில் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக பேட்டிங் ஆர்டரில் முதல் நான்கு வீரர்களை தவிர்த்து மற்ற இடங்களில் உள்ள வீரர்கள் மாற்றி மாற்றி களமிறக்கப்படுவது பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் நான்காவது இடத்தை தாண்டி எந்த ஒரு வீரருக்கும் நிலையான பேட்டிங் ஆர்டர் இல்லாமல் இருந்து வருகிறது.
ஷிவம் துபேவிற்கு நிர்வாகம் விளக்கம் தரனும் : ஜாஹீர் கான்
அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது ஆறாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டார். பின்னர் அவருக்கு அடுத்து ஜிதேஷ் சர்மா ஏழாவது வீரராக களமிறங்கினார். ஆனாலும் இறுதிவரை ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
கடைசி சில போட்டிகளாகவே ஷிவம் துபே எட்டாவது பேட்ஸ்மனாக களமிறங்கி வருகிறார். ஆனால் டி20 போட்டிகளில் அதிரடி வீரராக பார்க்கப்படும் ஷிவம் துபே மிடில் ஓவர்களின் போது களத்திற்குள் வந்தால் மிகப்பெரிய சிக்ஸர்களை அடிப்பார் என்று இந்திய அணியில் இருந்து வருகிறார். ஆனால் தற்போது அவருக்கு என்ன ரோல் இருக்கிறது? என்பது புரியாத அளவிற்கு அவர் பின்னுக்கு தள்ளப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் ஷிவம் துபேவின் இந்த பேட்டிங் ஆர்டர் குறித்து ஜாகிர் கான் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போது ஷிவம் துபே எந்த இடத்தில் இருக்கப்போகிறார்? என்பதே பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஏனெனில் முன்பெல்லாம் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்ட அவர் தற்போது எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இப்படி எட்டாவது இடத்திற்கு அவர் தள்ளப்படும் போது அவருடைய ரோல் என்ன? என்பது புரியவில்லை நேற்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜிதேஷ் சர்மா போட்டியை சிறப்பாக முடித்துக் கொடுத்தாலும் ஷிவம் துபே பேட்டிங் செய்யாமல் இருப்பது அவருக்கு சற்று ஏமாற்றத்தை அளிக்கும். அதேபோன்று அவர் அடுத்த போட்டியில் முன்கூட்டியே பேட்டிங் செய்ய வந்து ஆட்டமிழந்தால் அது அவர் அவருக்கு மேலும் அழுத்தத்தை அளிக்கும்.
இதையும் படிங்க : நான்காவது டி20 போட்டியில் 2 ஆவது இந்திய வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்தயிருக்கும் மாபெரும் சாதனை – விவரம் இதோ
எனவே ஷிவம் துபேவின் பேட்டிங் ஆர்டரில் நிலையான ஒரு இடத்தில் உறுதி செய்து அவருக்கு அந்த இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் இந்திய அணியில் ஷிவம் துபேவின் ரோல் என்ன என்பதை தெளிவாக நிர்வாகம் தான் விளக்க வேண்டும் என்று ஜாகிர் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.



