நான்காவது டி20 போட்டியில் 2 ஆவது இந்திய வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்தயிருக்கும் மாபெரும் சாதனை – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன.

ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்தவிருக்கும் சாதனை :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது வரும் நவம்பர் 6-ஆம் தேதி கோல்டு கோஸ்ட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் என்பதனால் இந்த போட்டியானது இவ்விரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. அதனால் இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த நான்காவது டி20 போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது இந்திய வீரராக ஒரு மாபெரும் சாதனைக்காக காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :

- Advertisement -

இதுவரை இந்திய அணிக்காக 78 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 98 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள வேளையில் அடுத்த போட்டியில் மேலும் அவர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

இதையும் படிங்க : அர்ஷ்தீப் சிங் விளையாடுனாலே விக்கெட் எடுக்குறாரு.. ஆனா அவரை ஏன் இப்படி பண்றீங்க? – ஆகாஷ் சோப்ரா கேள்வி

ஏற்கனவே இந்திய அணி சார்பாக 108 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய டி20 பந்து வீச்சாளராக முதலிடத்தில் இருக்கும் வேளையில் அர்ஷ்தீப் சிங்குக்கு அடுத்து 100-வது விக்கெட்டை கைப்பற்றப்போகும் இரண்டாவது வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனை நிகழ்த்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement