ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹோபர்ட் நகரில் நேற்று நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது.
அர்ஷ்தீப் சிங்கிற்கு ஏன் தொடர் வாய்ப்புகள் வழங்குவதில்லை : ஆகாஷ் சோப்ரா கேள்வி
பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 188 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 49 ரன்களையும், திலக் வர்மா 29 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர். அதே வேளையில் இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு மிக முக்கியமான காரணமாக இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் திகழ்ந்தார்.
நேற்றைய போட்டியில் ஹர்ஷித் ராணா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக வாய்ப்பினை பெற்ற அர்ஷ்தீப் சிங் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 ஓவர்களில் 35 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு ஏன் தொடர்ந்து விளையாட வாய்ப்பு அளிக்க மறுக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : அர்ஷ்தீப் சிங் டி20 போட்டிகளில் இந்திய அணியின் முதன்மை பவுலராக இருந்து வருகிறார். எப்போதெல்லாம் அவர் விளையாடினாலும் அவரிடம் இருந்து விக்கெட்டுகள் கிடைக்கின்றன. நேற்றைய போட்டியில் கூட அவர் விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார்.
இதையும் படிங்க : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறும் சஞ்சு சாம்சன் செல்லப்போகும் அணி இதுதான் – விவரம் இதோ
இப்படி மிகச் சிறப்பாக செயல்படும் ஒரு வீரருக்கு தொடர்ச்சியாக போட்டியில் விளையாட வாய்ப்பினை மறுப்பது ஏன்? ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவரது பந்துவீச்சு மிகச் சிறப்பாக அமைந்தது. இனிமேலாவது அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பினை வழங்குங்கள் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



