இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை ஏன் ஹார்டிக் பாண்டியா பந்துவீசவில்லை – ஜாஹீர் கான் கொடுத்த விளக்கம்

Pandya

நடப்புச் சாம்பியனான மும்பை அணி தனது முதல் போட்டியை பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடியது. வெறும் 5 பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதால் தான் மும்பை அணி தோல்வி அடைந்தது என்று ரசிகர்கள் மட்டுமின்றி சில கிரிக்கெட் வல்லுனர்களும் கூறினர். மேலும் முதல் போட்டியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா ஏன் பந்து வீசவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பந்துவீச தொடங்கிய ஹர்திக் பாண்டியா ஏன் மும்பை இந்தியன்ஸ் அணியில் பந்துவீச வில்லை என்கிற கேள்வி அடுத்தடுத்து எழுந்தது.

Pandya

இந்நிலையில் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் ஜாகீர் கான் தற்போது விளக்கம் அளித்துள்ளார். தோள்பட்டை காயம் காரணமாக மிக நீண்ட இடைவெளியை மேற்கொண்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாடினார்.

5 டி20 போட்டிகளையும் சேர்த்து 17 ஓவர்களில் கடைசி ஒருநாள் போட்டியில் 9 ஓவர்கள் வீசிய ஹர்திக் பாண்டியா மிகவும் சிரமப்பட்டு பந்துவீசினார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் நடவடிக்கை இயக்குனர் ஜாகிர் கான் கூறியுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஹர்திக் பாண்டியா இன்னும் சில காலம் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அவருக்கான பிசியோதெரபி சிகிச்சைகள் தொடர்ந்து கொடுத்த வண்ணம் இருக்கிறோம்.

pandya

மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க அவர் பந்துவீச தயாராகும் பட்சத்தில், மீண்டும் பழையபடி நிச்சயமாக பந்து வீசுவார் என்று ஜாகிர்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய ஜாகிர் கான் : ஹர்திக் பாண்டியா பந்துவீசும் முறை ஆறாவது பந்து வீச்சாளராக கீரன் போலார்ட் பந்து வீசுவார் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Pollard

நிறைய டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. நிச்சயமா மும்பை அணிக்கு கடந்தகால போட்டிகளில் சிறந்த வகையில் பந்து வீசி உள்ளார். எனவே அவரை இனி வரும் போட்டிகளில் பந்துவீச வைக்க முயற்சிப்போம் என்று ஜாகிர்கான் இறுதியாக கூறி முடித்தார்.