சத்தமில்லாமல் இந்திய அணியின் பெரிய ஹீரோவாக இவர் மாறி வருகிறார் – இந்திய இளம்வீரரை புகழ்ந்த ஜாஹீர் கான்

ind
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இதுவரை டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடி உள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்கிற கணக்கில் வென்றது. பின்னர் நடைபெற்ற டி-20 தொடரை 3-2 என்கிற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் குறித்து அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர் கான் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இளம்வீரர் ஒருவரை பாராட்டியுள்ளார்.

thakur 1

- Advertisement -

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மிக சிறப்பான பங்கை அளித்து வந்தார். அதிலிருந்து அவர் தனது ஆல்ரவுண்டர் திறமையை மெருகேற்றி இருக்கிறார்.நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இரண்டாவது போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும் மற்றும் கடைசி இரண்டு போட்டிகள் ஆன நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

மேலும் இந்திய அணி வென்றுள்ள மூன்று போட்டிகளிலுமே தாகூர் விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அவர் கைப்பற்றிய விக்கெட்டுகள் அனைத்துமே மிக முக்கியமான விக்கெட்டுகள். ஒருவகையில் அணியின் வெற்றிக்கு சைலன்டாக உதவியிருக்கிறார் ஷர்துல் தாகூர் என்று ஜாகீர் கான் கூறியுள்ளார்.

thakur

ஷர்துல் தாகூர் பார்க்கையில் மிகப்பெரிய இம்பாக்ட் இல்லாத வீரராக தெரிவார். ஆனால் மிக சாமர்த்தியமாக சைலண்டாக தனது வேலையை கனகச்சிதமாக முடிக்க கூடிய ஆற்றல் அவரிடம் நிறைய உள்ளது. அதை இந்த தொடரில் நன்கு உணர முடிந்தது. நிச்சயமாக இனி வரும் காலங்களில் இந்திய அணிக்கு சைலண்டாக பல வெற்றி தருணங்களை ஷர்துல் தாகூர் ஏற்படுத்திக் கொடுப்பார் என்று ஜாகிர்கான் புகழ்ந்து கூறியுள்ளார்.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. அதில் நேற்று நடந்த முதல் போட்டியில் தாகூர் ஆறு ஓவர்களை வீசி 37 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement