இக்கட்டான சூழ்நிலையில் கேப்டன்சியை கையாள்வதில் இவர் வல்லவர் – ஜாஹீர் கான் ஓபன் டாக்

Zaheer
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில் அதிகபட்சமாக மும்பை அணி நான்கு முறையும், சென்னை அணி மூன்று முறையும் கோப்பையை கைப்பற்றி உள்ளன.

CskvsMi

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப் காரணமாக இந்த வருட ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ள நிலையில் இந்த ஐபிஎல் தொடரை கைப்பற்ற போகும் அணி எது ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

தற்போது மும்பை அணி சார்பில் ட்விட்டரில் #AskZakOnMi என்ற ஹேஷ்டேக் மூலம் கேப்டன் ரோகித் இடம் நீங்கள் பார்த்த தரம் என்ன ? என்ற கேள்வி ஜாஹீர் கானுக்கு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இதற்கான தனது பதிலை ஜாஹீர் கான் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Rohith

ரோகித் ஷர்மாவிடம் இக்கட்டான சூழ்நிலையிலும் நிதானமாக முடிவு எடுக்கும் தன்மை இருக்கிறது. அதே போன்று போட்டியின் தன்மை குறித்தும் தீவிரமாக சிந்திக்க கூடிய திறமை அவரிடம் உள்ளது. அணியில் உள்ள சிறந்த பதினொரு வீரர்களை தேர்வு செய்வதில் ஆரம்பித்து அந்த வீரர்களின் பெஸ்ட்டை எப்படி வாங்குவது என்பது வரை நன்றாக தெரிந்து வைத்து வைத்துள்ளார்.

Zaheer 1

அவரிடம் ஒரு கிரிக்கெட் அணியை திறம்பட வழிநடத்திச் செல்வதற்கான அனைத்து தலைமை பண்பும் கேப்டன்சியும் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மும்பை அணிக்காக நான்கு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ள ரோஹித் 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை அணியை வழிநடத்தி வருகிறார். ரோகித் சர்மாவின் தலைமையில் ஜாஹீர் கான் மும்பை அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement