இந்த ஒருவிடயம் நடந்தா போதும். மும்பை வீரர்களுக்கு மீண்டும் ஸ்பார்க் கெடச்சிடும் – ஜாஹீர் கான் நம்பிக்கை

Zaheer
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் எப்பொழுதுமே பெரும் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு சரியான வீரர்களை தேர்வு செய்யாமல் சிக்கலில் சிக்கிக் கொண்டது. மும்பை அணியில் இருந்து வெளியேறிய பல வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட பல வீரர்கள் தற்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

RCB vs MI Rohit Sharma

- Advertisement -

குறிப்பாக மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் கூட தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக முதல் 4 போட்டிகளில் மும்பை அணி தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ளது.

இப்படி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ள ஜாம்பவான் அணியான மும்பையை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கிண்டலும் செய்து வருகின்றனர். இந்நிலையில் மும்பை அணி இந்த சிக்கலிலிருந்து நிச்சயம் மீண்டு வரும் என்று ஜாகிர் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது ஆரம்பகட்ட லீக் போட்டிகள் தான் நடைபெற்று வருகின்றன.

Suryakumar yadhav MI vs RCB.jpeg

இன்னும் போகப் போக இத்தொடரானது சுவாரசியம் அடையும். மும்பை அணி ஒரு வெற்றி பெற்று விட்டால் மட்டும் போதும் அதன் பிறகு தானாக ஸ்பார்க் கிடைத்துவிடும். சில நேரங்களில் இப்படியெல்லாம் நடக்கும் ஆனால் இதுபோன்ற இக்கட்டான சூழலில் என்ன ஆனாலும் அதில் இருந்து நிச்சயம் மும்பை அணி மீண்டு வரும்.

- Advertisement -

எங்கள் அணியில் உள்ள பிளேயர்கள் நல்ல நம்பிக்கையுடன் போட்டிகளை அணுக வேண்டியது அவசியம். அவ்வாறு விளையாடி ஒரு வெற்றியைப் பெற்று விட்டால் நிச்சயம் இதிலிருந்து வெளிவர முடியும். இனி வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து மும்பை மணி நிச்சயம் மீண்டு வரும் என ஜாஹீர் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : போயும் போயும் இதுக்கா சண்டை போடுவீங்க. கிண்டலுக்கு ஆளான மும்பை – சென்னை, கலாய்க்கும் ரசிகர்கள்

ஐ.பி.எல் தொடரில் இருபெரும் ஜாம்பவான் அணிகளாக திகழும் மும்பை மற்றும் சென்னை அணியானது இத்தொடரின் முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை தந்துள்ளது.

Advertisement