நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் மும்பை அணி எதிர்கொண்ட முதல் 2 போட்டிகளிலுமே அந்த அணி தோல்வியை சந்தித்தது. முதலாவதாக பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சந்தித்த மும்பை அணியானது தோல்வி அடைந்த பிறகு அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகவும் தோல்வியை தழுவியது. ஏற்கனவே முதலாவது பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இவ்வேளையில் இந்த இரண்டாவது பாதியில் முதல் 2 போட்டிகளிலும் மும்பை அணியில் ஹார்டிக் பாண்டியா இடம்பெறவில்லை. அவர் அணியில் இடம்பெறாததே மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்து வரும் போட்டியில் நிச்சயம் ஹார்டிக் பாண்டியா அணியில் விளையாடுவார் என ஜாகிர்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : நாங்கள் பிராக்டீஸ் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி உள்ளோம். அதில் ஹார்டிக் பாண்டியா சிறப்பாக விளையாடி உள்ளார். ஆனாலும் அவருக்கு ஏற்பட்ட சிறிய காயம் காரணமாகவே அவர் முதல் இரண்டு போட்டியில் விளையாடவில்லை.

அடுத்து வரும் போட்டியில் நிச்சயம் அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் பாண்டியா விளையாடுவார். அவர் ஒரு மேட்ச் வின்னிங் பிளேயர் என்பது நாம் அறிந்ததே.
அந்த வகையில் நிச்சயமாக மும்பை அணி அடுத்து எதிர்கொள்ள உள்ள போட்டியில் அவர் விளையாடுவார் என்றும் இனி வரும் போட்டிகளில் மும்பை அணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் ஜாகிர்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



