2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர் அதன் பின்னர் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆலோசகராக செயல்பட்டிருந்தார். அவரது தலைமையின் கீழ் கொல்கத்தா அணியில் சிறிய மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு இந்த தொடரை வெற்றிகரமாக கொல்கத்தா அணி கைப்பற்றி சாம்பியன் பட்டத்தையும் பெற்று அசத்தியது.
லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் :
அதன் காரணமாக கம்பீரை பலரும் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை அடுத்து அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ அறிவித்தது.
அவரது தலைமையின் கீழ் தற்போது இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள வேளையில் அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக தற்போது இந்திய வீரர்கள் அனைவரும் துலீப் டிராபி தொடரில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கலை இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பி.சி.சி.ஐ இணைத்து விட்டதால் தற்போது லக்னோ அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் தேவைப்படுகிறது. இந்நிலையில்தான் லக்னோ அணி புதிய ஆலோசகராக இந்திய முன்னாள் வீரரான ஜாஹீர் கானை அறிவித்திருந்தது.
இந்நிலையில் லக்னோ அணியில் இணைந்த அவரிடம் சில கேள்விகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர்களது சார்பில் முன்வைக்கப்பட்டது. அதில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கல் இந்திய அணிக்கு சென்று விட்டதால் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க : அடிமேல் அடி.. 26 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெறும் சூழலுக்கு தள்ளப்பட்ட ஆஸி வீரர் – விவரம் இதோ
அதற்கு பதிலளித்த ஜாஹீர் கான் கூறுகையில் : நான் இருக்கும் போது எங்களது அணிக்கு ஒரு பந்துவீச்சு பயிற்சியாளர் தேவையா? அணிக்கு தேவையான அனைத்தையும் நானே செய்வேன். பந்துவீச்சாளர்களுக்கு நான் பயிற்சி அளிக்கிறேன் என கூறி அவரது தெளிவான பதிலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



