இந்த தெ.ஆ தொடரில் கலக்கப்போகும் வீரரே இவர்தான். நீங்க வேனா பாருங்க – ஜாஹீர் கான் ஓபன்டாக்

Zaheer
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடருக்கு அடுத்ததாக தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. ஜூன் 9-ஆம் தேதி இன்று தொடங்கும் இந்த தொடரானது ஜூன் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கே.எல் ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணி இத்தொடருக்காக அறிவிக்கப்பட்டது.

Practice

- Advertisement -

ஆனால் நேற்று திடீரென காயம் காரணமாக கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து வெளியேறிய நிலையில் ரிஷப் பண்ட் தலைமையில் இந்திய அணி தொடரில் பங்கேற்கும் என்று அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியது. ரோகித் சர்மா, விராத் கோலி, பும்ரா, ராகுல் மற்றும் ஷமி போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களம் இறங்குவதால் எவ்வாறு இந்த தொடரை சமாளிக்கப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்று பலரும் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாகீர்கான் இந்த இந்தியா தென் ஆப்பிரிக்கா தொடரில் அசத்தப் போகும் வீரர் யார் என்பது குறித்த தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

Pandya

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரில் இந்திய அணியின் கீ பிளேயராக யார் செயல்படுவார்கள் என்று நினைத்தால் எனது நினைவிற்கு உடனே வருவது ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான். ஏனெனில் கடைசியாக டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய அவர் அதன் பின்னர் தற்போது மீண்டும் நல்ல பார்முடன் அணிக்குத் திரும்பியுள்ளார்.

- Advertisement -

அதோடு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது மட்டுமின்றி பந்துவீச்சு, பீல்டிங் மற்றும் கேப்டன்சி என அனைத்திலுமே அசத்திய அவர் இந்த தொடரிலும் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடிப்பதற்காக தனது முழு திறனையும் வெளிப்படுத்துவார் என்று நினைப்பதாக ஜாஹீர் கான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இந்த ஒரு விஷயத்துல எந்த காம்ப்ரமைசும் பண்ணாத – உம்ரான் மாலிக்கிற்கு இர்பான் பதான் அட்வைஸ்

எனவே இந்தத் தொடரில் ஹார்டிக் பாண்டியாவின் ஆட்டம் அசத்தலாக இருக்கும் என்றும் நிச்சயம் நாம் இந்த தொடரில் உற்றுநோக்கும் வீரராக அவர் இந்த தொடரில் திகழ்வார் என்றும் ஜாஹீர் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement