இந்த ஒரு விஷயத்துல எந்த காம்ப்ரமைசும் பண்ணாத – உம்ரான் மாலிக்கிற்கு இர்பான் பதான் அட்வைஸ்

Umran-2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் தனது அதிவேக பந்துகளால் உலக பேட்ஸ்மேன்களை திணற வைத்த உம்ரான் மாலிக் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக பந்துவீசி அனைவரது பாராட்டையும் பெற்றார். அதோடு இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்த உம்ரான் மாலிக் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

Umran-1

- Advertisement -

வெகுவிரைவிலேயே ஐபிஎல் தொடரின் மூலம் புகழ் பெற்றுள்ள இந்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வீரர் சர்வதேச கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக அதிகவேக பந்துகளை வீசி எதிரணியினரை திணற வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் மணிக்கு 157 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி அசத்தியிருந்தார்.

அதோடு தற்போது இந்திய அணியில் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகையிலும் 163 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு அதிவேக பந்தை வீசி அனைவரையும் திகைக்க வைத்து இருந்தார். இந்நிலையில் நிச்சயம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளராக உருவெடுப்பார் என்று பலரும் கூறி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் உம்ரான் மாலிக்கிற்கு முக்கிய அறிவுரை ஒன்றினை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

umran

உம்ரான் மாலிக்கிடம் நான் தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பது ஒரு விடயம் மட்டும் தான். ஏற்கனவே அவரை நான் பார்க்கும் போது அதிவேகமாக பந்துவீசும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். இருந்தாலும் லைன் மற்றும் லென்த்தில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும் என்று நான் உம்ரான் மாலிக்கிடம் அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பேன்.

- Advertisement -

அதேபோல் எந்த காரணத்தைக் கொண்டும் அவருடைய வேகத்தை மட்டும் குறைக்கக் கூடாது என்று அவரிடம் தொடர்ந்து கூறி அறிவுரை கொடுத்துள்ளேன். ஏனெனில் அவர் வீசும் வேகத்தில் லைன் மற்றும் லென்த் ஆகியவை சரியாக இருந்தால் நிச்சயம் எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கு எதிராகவும் அவர் விக்கெட்டை வீழ்த்த முடியும்.

இதையும் படிங்க : சாம்பியன் பட்டம் வென்ற பாண்டியாவை தாண்டி ரிஷப் பண்டிற்கு கேப்டன் பதவி கிடைக்க – இதுவே காரணம்

அதே போன்று அவர் தொடர்ச்சியாக இதே வேகத்தில் வீசும் பட்சத்தில் மிகப்பெரிய பவுலராகவும் அவர் உருவெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதினால் வேகத்தை மட்டும் குறைக்க வேண்டாம் என்று உம்ரான் மாலிக்கிற்கு இர்பான் பதான் அட்வைஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement