சாம்பியன் பட்டம் வென்ற பாண்டியாவை தாண்டி ரிஷப் பண்டிற்கு கேப்டன் பதவி கிடைக்க – இதுவே காரணம்

Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று ஜூன் 9-ஆம் தேதி இரவு 7 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்ட வேளையில் இந்த தொடருக்கான இந்திய கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த கேஎல் ராகுல் காயம் காரணமாக நேற்று அணியில் இருந்து வெளியேறினார். அவரோடு சேர்த்து மற்றொரு வீரரான குல்தீப் யாதவும் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார்.

Practice

அதன்காரணமாக தற்போது இந்திய அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அணியின் துணை கேப்டனாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பதவி கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அவரை தாண்டி ரிஷப் பண்ட்டிற்கு கேப்டன்சி பதவி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை தாண்டி ரிஷப் பண்ட்டிற்கு கேப்டன் பதவியை கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்த விடயம் தற்போது இணையத்தில் ஒரு பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஆனால் அதற்கு பின்னால் உள்ள காரணங்களை இந்தப் பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Pant

அதன்படி ஹர்திக் பாண்டியா நடைபெற்று முடிந்த ஐபிஎல் சீசனில் கேப்டன் பதவி வகித்து சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தாலும் அவர் முதல் முறையாக தற்போதுதான் கேப்டன்சி செய்கிறார். ஆனால் ரிஷப் பண்ட் ஐபிஎல் சீசனில் கடந்த சீசனாகவே டெல்லி அணியை தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.

- Advertisement -

அதோடு கடந்த சில ஆண்டுகளாகவே பாண்டியா காயம் காரணமாக இந்திய அணியில் வருவதும் போவதுமாக இருந்து வருகிறார். ஆனால் ரிஷப் பண்ட் இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை வீரராக விளையாடி வருகிறார். அதோடு ரோகித்சர்மா பும்ரா ஆகியோரது ஜோடிக்கு அடுத்து கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர்தான் கேப்டன் பதவிக்கான போட்டியில் நிற்கின்றனர்.

இதையும் படிங்க : 250 வருட முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு வினோதம் ! உலகசாதனை படைத்த ரஞ்சி டீம் – முழுவிவரம்

தற்போது சீனியர் வீரராக இந்திய அணியில் உருப்பெற்று நிற்கும் ரிஷப் பண்ட் இதன்காரணமாகவே சாம்பியன் பட்டத்தை வென்ற பாண்டியாவை காட்டிலும் இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக கருதப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறார். அதனாலே இந்த தொடரில் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement