ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்குகிறது. மினி உலகக் கோப்பை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இந்தத் தொடரில் 2013க்குப்பின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய டாப் 5 வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய ஜாம்பவான் வீரர் ஜஹீர் கான் தேர்ந்தெடுத்துள்ளார்.
அந்தப் பட்டியலில் தற்சமயத்தில் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்ப்ரித் பும்ராவை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “உலகில் நிறைய சர்வதேச பவுலர்கள் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அதில் வாசிம் அக்ரம் கண்டிப்பாக ஒருவராக இருப்பார்”
டாப் 5 பெஸ்ட்:
“தன்னுடைய வித்தியாசமான வேரியேஷன், யார்கர், அரௌண்ட், ஓவர் தி விக்கெட் திசையிலிருந்து வீசக்கூடிய அவரால் மெதுவான பந்துகளையும் துல்லியமாக வீச முடியும். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பெரிய தாக்கத்தைக் கொண்டிருந்தார். கிளன் மெக்ராத் நான் பார்க்கக்கூடிய மற்றும் ஒரு பெயர். தன்னுடைய எளிமையான ஆக்சனை வைத்து துல்லியம் மற்றும் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆகியவற்றால் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்”
“புதிய பந்து உட்பட நம்முடைய கேரியர் முழுவதும் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தியவர். இந்த நேரத்தில் வக்கார் யூனிஸ் பற்றியும் பேசுவோம். ஸ்ட்ரைக் ரேட் மற்றும் தாக்கம் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். அவருடைய நம்பர்களைப் பார்த்தால் அது சிறப்பானதாக இருக்கும். தனது கேரியர் முழுவதும் அசத்திய அவர் நிறைய 5 விக்கெட்டுகளையும் (13) எடுத்துள்ளார்”
ஜஹீர் கான் தேர்வு:
“அந்த வகையில் விக்கெட்டுகளை எடுக்கும் அவருடைய திறன் அற்புதமானது. ரன்கள் கொடுப்பதைப் பற்றி பயப்படாமல் பவுலிங் செய்யக்கூடிய அவருடைய ஸ்டைலை இந்தக் காலத்தில் இருக்கும் வீரர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். சமீந்தா வாஸ் இந்தப் பட்டியலில் இருக்கக்கூடிய மற்றொரு பவுலர் என்று நான் கருதுகிறேன்”
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியிலிருந்து வெளியேறி வீட்டிற்கு சென்ற பவுலிங் கோச் மோர்கல் – என்ன நடந்தது?
“புதிய பந்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அவர் தன்னுடைய நல்ல லைன், லென்த் ஆகியவற்றால் தனது அணிக்காக எளிமையான ஆக்சனை வைத்து அசத்தியவர். டேல் ஸ்டைன் தன்னுடைய நெருப்பான அணுகுமுறையால் வேகமான அவுட்ஸ்விங் பந்துகளை வீசுவார். அதில் தாக்கம் இருக்கும். வெள்ளைக்கோட்டை பயன்படுத்தி வேகமாக வீசக்கூடிய அவர் அதற்குத் தகுந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவார்” என்று கூறினார்.



