
நூற்றாண்டு சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் பல மகத்தான வீரர்களை கண்டுள்ளது. தற்போதைய நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீம் ஸ்மித், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் அவர்களை ஃபேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று ஆங்கிலத்தில் வல்லுனர்களும் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டுவது வழக்கமாகும்.
இந்நிலையில் சிறந்த பேட்ஸ்மேங்கனைப் போல நவீன கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் 4 வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய ஜாம்பவான் ஜாகிர் கான் தேர்ந்தெடுத்துள்ளார். அதில் முதலாவதாக இந்திய அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ராவை அவர் சிறந்த பவுலர் என்று தேர்ந்தெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்திய அணியின் சீனியர் முகமது ஷமியும் சிறந்த பவுலர் என்ற ஜாஹீர் கான் பாராட்டியுள்ளார்.
அவர்களைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் அதிரடி இளம் வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடாவையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார். அது போக ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் மற்றும் கேப்டன் பட் கமின்ஸ் ஆகியோரையும் சிறந்த பவுலர் என்று ஜஹீர் கான் வர்ணித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“இந்தியா தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அடுத்தடுத்த 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்களுக்கு இந்தியா தகுதி பெற்றது. இந்திய அணி அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் நன்றாக செயல்பட்டுள்ளது. எனவே அதற்கு காரணமாக திகழும் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோரை என்னுடைய ஃபேப் பட்டியலில் கண்டிப்பாக தேர்ந்தெடுப்பேன்”
“அவர்களை தவிர்த்து ககிஸோ ரபாடா மற்றும் ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் இருப்பார்கள். பட் கமின்ஸ் இந்த பட்டியலில் இணையக்கூடிய ஒரு சிறப்பான வீரர். எனவே இவர்கள் தான் இப்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய டாப் 4 அல்லது 5 பவுலர்கள் ஆவார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல பும்ரா இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அசத்தி வருகிறார்.
இதையும் படிங்க: 5 பேரை பாத்து ஆஸ்திரேலிய அணி பயந்துட்டாங்க.. அதான் அந்த இந்திய வீரரை டார்கெட் பண்றாங்க.. பசித் அலி
அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் 64 போட்டிகளில் 229 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஷமி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். ககிஸோ ரபடா அதே 64 போட்டிகளில் 299 விக்கெட்டுகளை எடுத்து ஸ்மித், விராட் கோலி போன்ற டாப் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் 70 போட்டிகளில் 273 விக்கெட்டுகளும் 62 போட்டிகளில் 269 விக்கெட்டுகளும் எடுத்து அகத்தி வருவது குறிப்பிடத்தக்கது.