மேகங்கள் இல்லனா டம்மி தான், ஜேம்ஸ் ஆண்டர்சனை விட நம்ம ஜஹீர் கான் தான் மகத்தானவர் – நட்சத்திர இந்திய வீரர் பாராட்டு

James Anderson
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அப்போட்டியில் ஜாம்பவானாக போற்றப்படும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 1 விக்கெட் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமானது. கடந்த 2002இல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 273 போட்டிகளில் 269 விக்கெட்களை மட்டுமே எடுத்து சுமாராகவே செயல்பட்டதால் 2015க்குப்பின் விளையாட முடியவில்லை.

James-Anderson

- Advertisement -

அதனாலேயே டி20 கிரிக்கெட்டிலும் எப்போதுமே விளையாடாத அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2003இல் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் சாதாரண பவுலராகவே செயல்பட்டாலும் அனுபவத்தால் பாடங்களை கற்று கொஞ்சம் கொஞ்சமாக 30 வயதை தாண்டிய பின் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க வயதை வரும் நம்பராக்கி பழைய சரக்கை போல கொத்து கொத்தாக விக்கெட்டுகளை அள்ளிய அவர் இதுவரை 177 போட்டிகளில் 685 விக்கெட்களை எடுத்துள்ளார்.

ஜஹீர் கான் பெஸ்ட்:
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற கிளன் மெக்ராத் சாதனையை தகர்த்த அவர் ஆல் டைம் பட்டியலில் 3வது வீரராக இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளேவை முந்தி ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் ஆகியோரையும் மிஞ்சுவதற்கு தயாராகி வருகிறார். இருப்பினும் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் கூடிய ஈரப்பதமான சூழ்நிலையில் பந்தை ஸ்விங் செய்து இந்தளவுக்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்றும் ஃபிளாட்டான பிட்ச் அல்லது இந்தியா போன்ற சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் தடுமாறுவார் என்று விமர்சிக்கும் ஒரு தரப்பு ரசிகர்கள் அவரை “க்ளவுடர்சன்” என சமூக வலைத்தளங்களில் கலாய்ப்பது வழக்கமாகும்.

Zaheer-Khan

அதற்கேற்றார் போல் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற முதல் போட்டியின் பிட்ச் வேகம், ஸ்விங், பவுன்ஸ் என எதற்குமே சாதகமாக இல்லாமல் இருந்ததாக தெரிவித்த ஆண்டர்சன் இதே நிலைமை இத்தொடர் முழுவதும் நீடித்தால் 40 வயதாகும் தாம் ஓய்வு பெற்று விடுவேன் என்று பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியினரை மறைமுகமாக விமர்சித்தார். பொதுவாக அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்தக்கூடியவர்களையே ஜாம்பவான்கள் என்று போற்றும் நிலையில் அவர் அப்படி புகார் செய்தது ரசிகர்கள் மீண்டும் கலாய்த்தனர்.

- Advertisement -

இந்நிலையில் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலையில் மிரட்டும் ஆண்டர்சனை விட பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ஸ்விங் செய்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஜாம்பவான் ஜஹீர் கான் தம்மைப் பொறுத்த வரை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று இஷாந்த் சர்மா கூறியுள்ளார். குறிப்பாக ஜஹீர் கான் போல ஈரப்பதமான மேகங்கள் இல்லாத வெயிலடிக்கும் சூழ்நிலையில் ஆண்டர்சன் விளையாடியிருந்தால் இந்தளவுக்கு சாதித்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Ishanth-1

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் (தலா 311) என்ற ஜஹீர் கான் சாதனையை சமன் செய்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “ஆண்டர்சன் பவுலிங் ஸ்டைல் மற்றும் விதம் ஆகியன முற்றிலும் மாறுபட்டது. அவர் இங்கிலாந்தில் வித்தியாசமான சூழ்நிலையில் விளையாடினார். ஒருவேளை இந்தியாவில் அவர் விளையாடியிருந்தால் இந்தளவுக்கு வெற்றிகரமாக இருந்திருக்க முடியாது. எனவே அவரை விட ஜாகிர் கான் சிறந்தவர்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs WI : இதெல்லாம் சரியே இல்ல. தேர்வுக்குழுவை கண்டித்து இளம்வீரர்களுக்கு ஆதரவாக குரலெழுப்பிய – வாசிம் ஜாபர்

மேலும் 2014 வெலிங்டன் போட்டியில் கேட்ச் விட்டதற்காக தம்முடைய குருவான ஜஹீர் கானை அனைவரும் நினைப்பது போல் திட்டவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “அன்றைய நாளில் என்னை நானே திட்டிக் கொண்டேன். மாறாக கேட்ச் விட்டதற்காக யாரையும் திட்டவில்லை. அந்த நிலையில் என்னுடைய குருவான அவரை நான் திட்டுவேனா? அப்படி நான் கனவில் கூட நினைத்ததில்லை. இருப்பினும் அந்த போட்டியில் மெக்கல்லம் பெரிய ரன்களை அடித்ததால் நான் கடுப்பானேன். ஜஹீர், ஷமி மற்றும் நான் ஃபிளாட்டான பிட்ச்சை கொண்ட அந்தப் போட்டியில் ஒவ்வொரு 4 ஓவருக்கு ஒருமுறை மாற்றி மாற்றி வீசியது விரக்தியை ஏற்படுத்தியது” என்று கூறினார்.

Advertisement