அவர் தான் இந்திய கிரிக்கெட்டின் ஒரிஜினல் டான்.. விராட் கோலி மாதிரி பிளேயர்ஸ் உருவாக காரணம்.. ஜஹீர் அப்பாஸ்

Zaheer Abbas
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் ஜூலை 10ஆம் தேதி தம்முடைய 75வது பிறந்த நாளை கொண்டாடினார். 1971 – 1987 வரையிலான காலகட்டங்களில் விளையாடிய அவர் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக அந்த காலகட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் வெறித்தனமாக பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

ஆனால் அதே காலகட்டத்தில் ஹெல்மெட் போடாமலேயே தரமான வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை திறம்பட எதிர்கொண்ட கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்தார். மேலும் ஓய்வு பெறும் போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் மற்றும் ரன்கள் குவித்த வீரராகவும் அவர் சாதனை படைத்திருந்தார். அதனால் அவரைப் பார்த்து தான் சச்சின் டெண்டுல்கர் போன்ற பேட்ஸ்மேன்கள் இந்தியாவில் வளர துவங்கினர் என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஒரிஜினல் டான்:
சொல்லப் போனால் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கும் தமக்கு சுனில் கவாஸ்கர் தான் ரோல் மாடல் என்று சச்சின் டெண்டுல்கர் பலமுறை தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் கவாஸ்கருக்கு சச்சின் உட்பட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் சுனில் கவாஸ்கர் தான் இந்திய கிரிக்கெட்டின் உண்மையான டான் என்று பாகிஸ்தான் வீரர் ஜாஹிர் அப்பாஸ் பாராட்டியுள்ளார்.

இது பற்றி பிடிஐ இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது நீங்கள் 75 வயதை முடித்துள்ளீர்கள். இது உங்களுடைய வாழ்க்கையின் அற்புதமான இன்னிங்ஸ். உங்களுடைய பேட்டிங் போலவே போட்டியை பற்றிய உங்களின் நுணுக்கமான பார்வைகளும் விலைமதிப்பற்றது. சுனில் கவாஸ்கர் தான் இந்திய கிரிக்கெட்டின் ஒரிஜினல் பேட்டிங் டான்”

- Advertisement -

“அவர் பேட்டிங் செய்வதை நெருக்கமாக பார்த்து நானும் நிறைய கற்றுள்ளேன். கவாஸ்கரை ரோல் மாடலாக வைத்து தான் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற மகத்தான பேட்ஸ்மேன்களை இந்தியா உருவாக்கி வருகிறது” என்று கூறினார். அத்துடன் 1992 உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்வதற்கு சுனில் கவாஸ்கரின் வார்த்தைகள் உத்வேகத்தை கொடுத்ததாக மற்றொரு முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் பாராட்டினார்.

இதையும் படிங்க: இந்த போட்டியில் நாங்க தோல்வியை சந்திக்க காரணமே இதுதான்.. 3 ஆவது போட்டிக்கு பின் – சிக்கந்தர் ராசா பேட்டி

மேலும் கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேட்டி ஆகியோர் தான் 70களில் இந்திய அணியின் முதுகெலும்பாகத் திகழ்ந்ததாக மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரர் முஸ்தாக் முகமது பாராட்டினார். அது போக சக்லைன் முஸ்டக், சோயப் முகமது, மோசின் கான் போன்ற இன்னும் சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சுனில் கவாஸ்கருக்கு பாராட்டுடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement