இந்த போட்டியில் நாங்க தோல்வியை சந்திக்க காரணமே இதுதான்.. 3 ஆவது போட்டிக்கு பின் – சிக்கந்தர் ராசா பேட்டி

Raza
- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஜிம்பாப்வே அணி ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் ஒரு வெற்றியை பெற்று சம நிலையில் இருந்த வேளையில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது. இந்திய அணி இன்று பெற்ற வெற்றியுடன் சேர்த்து இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் முன்னிலை வகித்துள்ளது.

அந்த வகையில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று ஹராரே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்த தொடரில் முன்னிலை வகித்துள்ளது.

- Advertisement -

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது:

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய சிக்கந்தர் ராசா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திக்க பீல்டிங் ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.

- Advertisement -

எங்களது அணியின் பீல்டிங்கைப் பற்றி நான் பெருமையாக நினைத்தாலும் இன்று நாங்கள் 20 ரன்களுக்கு மேல் பீல்டிங்கில் விட்டுக் கொடுத்து விட்டோம். இறுதியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்துள்ளோம். இன்னும் பில்டிங்கில் நாங்கள் தீர்க்க வேண்டிய குறைகள் நிறைய இருக்கின்றன. அதனை தீர்க்க நினைக்கிறோம் கூடிய விரைவில் அதற்கான செயல்பாடுகளும் நடைபெறும்.

இதையும் படிங்க : இந்த விஷயத்தை நெனைச்சா உண்மையிலே பெருமையா இருக்கு.. 3 ஆவது போட்டியின் வெற்றிக்கு பிறகு – சுப்மன் கில் பேட்டி

கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் நிறைய துவக்க வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி பார்த்துள்ளோம். அதெல்லாம் ஒரு மாற்றத்திற்காக தான் எந்த ஒரு வீரருமே அணிக்காக தங்களது பங்களிப்பை வழங்குவது தான் அவர்களது பொறுப்பு. இளம் வீரர்கள் தவறு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அனுபவ வீரர்கள் தவறு செய்யும் போது அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என சிக்கந்தர் ராசா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement