இந்த விஷயத்தை நெனைச்சா உண்மையிலே பெருமையா இருக்கு.. 3 ஆவது போட்டியின் வெற்றிக்கு பிறகு – சுப்மன் கில் பேட்டி

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகித்தன.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று ஹராரே நகரில் நடைபெற்று முடிந்துள்ளது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 66 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்ததால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கில் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறையிலுமே மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி. இந்த மைதானம் விளையாடுவதற்கு சற்று சவாலாக இருந்தது. அதிலும் குறிப்பாக புதுப்பந்தில் லென்த் பால்களை அடிப்பதில் மிகவும் சிரமம் இருந்தது.

இதையும் படிங்க : நான் எடுத்த 2 விக்கெட்டுக்கும் அவர் தான் காரணம்.. அற்புதத்தை நிகழ்த்த விரும்புவாரு.. ஆவேஷ் கான் பேட்டி

அதனையே நாங்கள் எங்களது பலர்களிடம் கூறினேன். பந்து பழையதாக மாற மாற எளிதாக ரன்களை குவிக்க முடிவதால் புதுப்பந்தில் சிறப்பாக பந்து வீசுமாறு கூறியிருந்தோம். இந்த போட்டியின் வெற்றியில் அனைவருமே பங்களித்ததில் மிகவும் மகிழ்ச்சி என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement