நான் எடுத்த 2 விக்கெட்டுக்கும் அவர் தான் காரணம்.. பிஸ்னோய் அற்புதத்தை நிகழ்த்த விரும்புவாரு.. ஆவேஷ் கான்

Avesh Khan
- Advertisement -

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜூலை 10ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 183 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் கில் 66, ருதுராஜ் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா, முசர்பானி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து தொடர்ந்து சேசிங் செய்த ஜிம்பாப்வே முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 159/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டியோன் மேயர்ஸ் 65* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

சிறந்த ஃபீல்டர்:
அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா தங்களை சாம்பியன் என்பதை நிரூபித்து வருகிறது. குறிப்பாக முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் இந்திய அணி வெற்றி நடை போட்டு வருகிறது. இப்போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் தனது பங்கை ஆற்றினார்.

இந்நிலையில் தாம் 2 விக்கெட்டுகள் எடுத்ததற்கு கேப்டன் சுப்மன் கில் முக்கிய காரணமாக இருந்ததாக ஆவேஷ் கான் கூறியுள்ளார். ஏனெனில் கில் பவுலர்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் பிரையன் பெனட் கொடுத்த கேட்ச்சை ரவி பிஸ்னோய் அபாரமாக பிடித்ததாகவும் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடைய செயல்பாடுகளால் மகிழ்ச்சி. நான் எப்போதும் அணிக்காக தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். அதே போல இந்த இடத்தில் தான் பந்து வீச விரும்புகிறேன் என்று நான் சொல்ல மாட்டேன். அணிக்காக தேவைப்படும் அனைத்து இடங்களிலும் வீசத் தயாராக இருக்கிறேன். சுப்மன் கில் பவுலர்களின் கேப்டன். எங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுக்கும் அவர் எங்களது திட்டங்களுக்கு ஆதரவை கொடுத்து ஃபீல்டிங்கை செட்டிங் செய்கிறார்”

இதையும் படிங்க: நாட்டுக்காக விளையாடுவதே அற்புதம்.. ஜிம்பாப்வேவை விட அது எங்களுக்கு அழுத்தம் கொடுத்துச்சு.. சுந்தர் பேட்டி

“எனவே இன்று நான் எடுத்த 2 விக்கெட்டுகளுக்கும் அவர் தான் முக்கிய காரணம். ரவி பிஸ்னோய் நல்ல ஃபீல்டர். இது போன்ற கேட்ச்களை அவர் பிடித்ததை நாம் ஐபிஎல் தொடரில் பார்த்துள்ளோம். அவர் எப்போதுமே அற்புதமான கேட்சுகளை பிடிக்க விரும்புவார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 4வது போட்டி வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement