நாட்டுக்காக விளையாடுவதே அற்புதம்.. ஜிம்பாப்வேவை விட அது எங்களுக்கு அழுத்தம் கொடுத்துச்சு.. சுந்தர் பேட்டி

Washington Sundar
- Advertisement -

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஜூலை 10ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற்ற அந்த0 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் கில் 66, ருதுராஜ் கைக்வாட் 49, ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்தனர்.

ஜிம்பாப்வே சார்பில் கேப்டன் சிக்கந்தர் ராசா முசர்பானி தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஜிம்பாப்வே ஆரம்ப முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 159/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டியோன் மேயர்ஸ் 65*, க்ளைவ் மடாண்டே 37 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3, ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் சுந்தர்:
அதனால் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகிக்கும் இந்தியா முக்கிய வீரர்கள் இல்லாமலேயே தங்களை சாம்பியன் என்பது நிரூபித்து வருகிறது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் நாட்டுக்காக விளையாடி வெற்றி காண்பது அற்புதமான உணர்வை கொடுப்பதாக வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார். மேலும் ஜிம்பாப்வே அணியை விட இப்போட்டியின் பிட்ச் தான் தங்களை அழுத்தத்தை கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் அதை சமாளித்து தாங்கள் வெற்றி கண்டதாக தெரிவிக்கும் அவர் இடைவெளி நாட்களில் ஜிம்பாப்வே நாட்டை சுற்றி பார்க்க விரும்புவதாகவும் கூறினார்

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாட்டுக்காக ஒவ்வொரு முறையும் விளையாடும் போது அற்புதமான உணர்வு கிடைக்கிறது. முதல் இரண்டு போட்டிகளை விட இது கண்டிப்பாக நல்ல பிட்ச். இந்தப் போட்டியை ஒப்பிடும் போது முதல் 2 போட்டிகளில் இதே பவுலர்களுக்கு பிட்ச் அதிகமாக கை கொடுத்தது. இன்றைய போட்டியில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அதில் நன்றாக பேட்டிங் செய்தனர்”

இதையும் படிங்க: 23 ரன்ஸ்.. போராடிய ஜிம்பாப்வே.. 3.8 எக்கனாமியில் முக்கிய நேரத்தில் மடக்கிய தமிழக வீரர் சுந்தர்.. இந்தியா வெற்றி

“அது எங்கள் மீது நிறைய அழுத்தத்தை போட்டது. இருப்பினும் நாங்கள் அதில் எங்களுடைய திட்டங்களை செயல்படுத்தினோம். அதே போல ஜிம்பாப்வே நாட்டில் இன்னும் நாங்கள் நிறைய இடங்களை சுற்றி பார்ப்போம் என்று நம்புகிறேன். அதே சமயம் சனிக்கிழமை இத்தொடரை நாங்கள் கைப்பற்றுவோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement