23 ரன்ஸ்.. போராடிய ஜிம்பாப்வே.. 3.8 எக்கனாமியில் முக்கிய நேரத்தில் மடக்கிய தமிழக வீரர் சுந்தர்.. இந்தியா வெற்றி

IND vs ZIM 333
- Advertisement -

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது. அந்த நிலையில் இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி ஜூலை 10ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹராரே நகரில் துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 36 (27) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் சுப்மன் கில் நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:
ஆனால் எதிர்ப்புறம் வந்த அபிஷேக் ஷர்மா 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அதற்கடுத்ததாக வந்த ருதுராஜ் கைக்வாட் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் 11வது ஓவரில் இணைந்த இந்த ஜோடி 18 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 3வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தியது. அதில் கேப்டன் கில் அரை சதமடித்து 66 (49) ரன்களில் அவுட்டானார்.

மறுபுறம் அரை சதத்தை நழுவ விட்ட ருதுராஜ் அதிரடியாக 4 பவுண்டரி 3 சிக்சருடன் 49 (28) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் சஞ்சு சாம்சன் 12* (7) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 182/4 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே சார்பில் கேப்டன் சிகந்தர் ராசா 2, முசர்பானி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 183 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பத்திலேயே வேஸ்லி 1, முசர்பானி 13, பிரையன் பெனட் 4, கேப்டன் சிகந்தார் ராசா 15 கேம்பல் 1 ரன்களில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 39/5 என தடுமாறிய அந்த அணிக்கு டியோன் மேயர்ஸ் – க்ளைவ் மடண்டே ஆகியோர் சேர்ந்து அதிரடியாக விளையாடி 6வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடினார். ஆனால் அந்த ஜோடியை முக்கிய நேரத்தில் உடைத்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 37 (26) ரன்களில் மடாண்டேவை அவுட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கினார்.

இதையும் படிங்க: வினய் குமாருக்கு நோ.. கம்பீர் பேச்சுக்கு முழுசா தலையாட்டாத பிசிசிஐ.. ஜஹீர் கானுடன் தமிழக வீரருக்கு வலை

அதனால் கடையில் எதிர்புறம் டியோன் மேயர்ஸ் 65* ரன்கள் மசகட்சா 18* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ஜிம்பாப்வே 159/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 3.8 எக்கனாமியில் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 3, ஆவேஷ் கான் விக்கெட்டுகள் எ

Advertisement