வினய் குமாருக்கு நோ.. கம்பீர் பேச்சுக்கு முழுசா தலையாட்டாத பிசிசிஐ.. ஜஹீர் கானுடன் தமிழக வீரருக்கு வலை

Zaheer Khan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு விடைபெற்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட் இடத்தில் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. 2007 மற்றும் 2011 உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய கௌதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ளார்.

மேலும் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக 2 கோப்பைகளைக் வென்றுள்ள அவர் இந்த வருடம் ஆலோசகராக செயல்பட்டு கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக அவருவி இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த சூழ்நிலையில் ராகுல் டிராவிட்டுடன் பராஸ் மாம்ப்ரே, விக்ரம் ரத்தோர் ஆகிய பவுலிங் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களும் ஓய்வு பெற்றனர்.

- Advertisement -

தலையாட்டாத பிசிசிஐ:
எனவே அவர்களுக்கு பதில் புதிய துணை பயிற்சியாளர்களை நியமிக்கும் வேலையில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. சொல்லப்போனால் கௌதம் கம்பீர் தமக்குத் தகுந்த துணை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான உரிமையை பிசிசிஐ வழங்கியுள்ளது. அதன் காரணமாக கொல்கத்தா அணியில் துணை பயிற்சியாளராக செயல்பட்ட அபிஷேக் நாயரை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க கௌதம் கம்பீர் பரிந்துரைத்ததாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே போல பவுலிங் பயிற்சியாளராக கர்நாடகாவைச் சேர்ந்த வினைய் குமாரை அவர் பரிந்துரைத்ததாகவும் தெரிய வந்தது. இந்நிலையில் ரோகித் சர்மாவின் நெருங்கிய நண்பரான அபிஷேக் நாயர் கொல்கத்தா அணியில் ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார். எனவே அவரை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐயும் விரும்புவதாக புதிய செய்தி தெரிவிக்கிறது.

- Advertisement -

ஆனால் வினய் குமாரை விரும்பாத பிசிசிஐ அதற்கு பதிலாக ஜாம்பவான் ஜாகீர் கான் அல்லது தமிழக வீரர் லட்சுமிபதி பாலாஜி ஆகியோரில் ஒருவரை பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க விரும்புவதாக தெரிய வந்துள்ளது. ஏனெனில் வினைய் குமாரை விட ஜகீர் கான் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டவர் என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அத்துடன் 5 கோப்பைகளை வென்ற மும்பை அணியில் அவர் நீண்ட காலமாக பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு அனுபவத்தை கொண்டவர்.

இதையும் படிங்க: 3வது ஜிம்பாப்வே போட்டியில் நீக்கப்பட்ட 3 வீரர்கள்.. இந்திய அணியில் 4 மாற்றம் செய்த கில்.. பிளேயிங் லெவன் இதோ

அதே போல முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி சிஎஸ்கே அணியில் 10 வருடத்திற்கும் மேலாக பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவத்தை கொண்டுள்ளார். எனவே ஜஹீர் அல்லது பாலாஜியை பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இது பற்றி பிசிசிஐ நிர்வாகி ஏஎன்ஐ இணையத்தில் தெரிவித்தது பின்வருமாறு. “ஜாகீர் கான் மற்றும் லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோரை பவுலிங் பயிற்சியாளர் இடத்திற்கு கொண்டுவர பிசிசிஐ விவாதித்து வருகிறது. வினய் குமார் மீது பிசிசிஐ ஆர்வம் காட்டவில்லை” என்று கூறினார்.

Advertisement