3வது ஜிம்பாப்வே போட்டியில் நீக்கப்பட்ட 3 வீரர்கள்.. இந்திய அணியில் 4 மாற்றம் செய்த கில்.. பிளேயிங் லெவன் இதோ

IND vs ZIM
- Advertisement -

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை வென்ற பெரும்பாலான வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய அணி விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

ஆனால் இரண்டாவது போட்டியில் 100 வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்திய தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அந்த நிலையில் இத்தொடரின் 3வது போட்டி ஜூலை 10ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

3 மாற்றம்:
அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் வகித்த சிவம் துபே, சஞ்சு சாம்சன், யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மீண்டும் இணைந்தனர். எனவே அந்த 3 வீரர்களையும் பிளேயிங் லெவனில் சேர்த்த கேப்டன் கில் அதற்காக ரியான் பராக், துருவ் ஜுரேல், முகேஷ் குமார் ஆகியோரை நீக்கினார். அப்படி 3 மாற்றங்கள் செய்தாலும் தங்களுடைய அணியின் சமநிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்று கேப்டன் கில் தெரிவித்தார்.

அத்துடன் இதற்கு முன் துவக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 3வது இடத்தில் களமிறக்கப்பட்டார். குறிப்பாக ஜெய்ஸ்வால் துவக்க வீரர் என்பதால் அபிஷேக் சர்மாவை 3வது இடத்தில் விளையாட வைக்கும் முடிவை இந்தியா எடுத்தது. அதனால் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இது பற்றி டாஸ் வென்று கில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். பிட்ச்சில் ஈரப்பதம் இருப்பது போல் தெரிகிறது. அது எங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். சஞ்சு, சிவம், ஜெய்ஸ்வால் ஆகிய உலகக் கோப்பை அணியில் விளையாடியோர் மீண்டும் வந்துள்ளனர். அதனால் கலீல் அகமது மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இப்போட்டியில் ஓய்வு எடுக்கின்றனர். இப்போதும் எங்களுடைய அணி சமநிலையுடன் இருப்பதாக கருதுகிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 3.5 வருடம்.. 5 உலகக் கோப்பைகள்.. கெளதம் கம்பீருக்கு காத்திருக்கும் 8 மெகா சவால்கள்.. சாதித்து காட்டுவாரா?

3வது போட்டிக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் (கீப்பர்), சிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், ஆவேஷ் கான், கலீல் அஹ்மத்

Advertisement