3.5 வருடம்.. 5 உலகக் கோப்பைகள்.. கெளதம் கம்பீருக்கு காத்திருக்கும் 8 மெகா சவால்கள்.. சாதித்து காட்டுவாரா?

Gautam Gambhir 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2007, 2011 உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் சவாலான இந்திய அணியை வழி நடத்துவதற்கு தகுதியான நபராகவே பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் 31 டிசம்பர் 2027 வரை 3.5 வருடங்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ள கம்பீருக்கு காத்திருக்கும் 8 சவால்களைப் பற்றி பார்ப்போம்.
1. பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2024/25: வரும் டிசம்பர் மாதம் துவங்கும் இத்தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. சொல்லப்போனால் கடைசி 2 முறை ஆஸ்திரேலியாவில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

எனவே தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் சாம்பியன் திகழும் இந்தியா இம்முறையும் வென்று பட்டத்தை தக்க வேண்டியதற்கான பொறுப்பு கம்பீருக்கு ஏற்பட்டுள்ளது.
2. சாம்பியன்ஸ் ட்ராபி 2025: கடைசியாக 2013ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. எனவே 12 வருடங்கள் கழித்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்வதற்கு பயிற்சியாளராக உதவ வேண்டிய கடமை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

3. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: 2021, 2023 ஃபைனல்களில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்விகளை சந்தித்தது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடும் யுக்தியை கொண்டு வந்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியாவுக்கு பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு கம்பீருக்கு ஏற்பட்டுள்ளது.
4. இங்கிலாந்து தொடர்: சவாலான இங்கிலாந்து மண்ணில் இந்தியா கடைசியாக 2007இல் டெஸ்ட் தொடரை வென்றது. எனவே 2025 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கம்பீருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

- Advertisement -

5. டி20 உலகக்கோப்பை 2026: தற்போது வென்ற டி20 உலகக் கோப்பையை 2026இல் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா தக்க வைக்கும் முனைப்புடன் விளையாட உள்ளது. அதை ரோஹித் மற்றும் விராட் கோலி இல்லாமல் இளம் அணியை வைத்து சாதித்து காட்ட வேண்டிய சூழ்நிலை கம்பீருக்கு ஏற்பட்டுள்ளது.
6. நியூஸிலாந்து தொடர்: கடைசியாக தோனி தலைமையில் 2009ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல கம்பீர் முக்கிய பங்காற்றினார். எனவே 2026 நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளராக அவர் இந்தியா வெற்றி முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது.

இதையும் படிங்க: நான் பந்து வீசியதிலேயே அவர் தான் சிறந்த பேட்ஸ்மேன்.. இந்திய வீரர் பற்றி ஆண்டர்சன் பேட்டி

7. உலகக் கோப்பை 2027: 2024இல் பொறுப்பேற்கும் கௌதம் கம்பீரின் முதன்மை இலக்கு தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பையை வெல்வதாகும். கடைசியாக 2011 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் இம்முறை பயிற்சியாளராக அதை வென்று காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
8. டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 2027இல் கண்டிப்பாக அஸ்வின், ரோஹித் ஆகியோர் ஓய்வு பெற்றிருப்பார்கள். அதே போல ஜடேஜா, கோலியும் விளையாடுவது சந்தேகமே. எனவே அதற்கு தகுந்த வீரர்களை கண்டறிந்து 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கம்பீரின் கையில் உள்ளது.

Advertisement