அம்பயர் கிட்ட போயி இப்படியா பண்ணுவீங்க. இருந்தாலும் உங்களுக்கு குசும்பு அதிகம் தான் – சாஹல் செய்த கலாட்டா

Yuzvendra-Chahal
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டம் நேற்று பெர்த் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாகல் தனது குறும்பான செயலை அம்பயரிடம் காட்டிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

IND vs SA VIrat Kohli Rohit Sharma

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்புக்கு சற்றும் குறைவின்றி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே குவித்தது.

பின்னர் 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது 19.4 ஓவர்களில் 137 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது முதல் பாதியில் கே.எல் ராகுல் விளையாடிக் கொண்டிருந்தபோது தென்னாப்பிரிக்க வீரர் ஒரு வீசிய பந்து ஒன்று படாத இடத்தில் பந்து பட்டு ராகுல் வலியால் துடித்தார்.

Chahal

அதன் காரணமாக வலி தாங்க முடியாமல் தரையில் மண்டியிட்ட அவரை இந்திய அணியின் மருத்துவ உதவியாளர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். அப்போது சிறிது நேரம் ஆட்டம் தடை பட்டதால் களத்தில் இருந்த இந்திய வீரர்களுக்கு ஓய்வறையில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ட்ரிங்க்ஸ் எடுத்து வந்து கொடுத்தார்.

- Advertisement -

அப்போது வீரர்களிடம் மட்டுமின்றி களத்தில் இருந்த அம்பயர்களிடமும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அம்பயரின் பக்கம் சென்ற சாஹல் கே.எல் ராகுலுக்கு அடிப்பட்டதை போலவே உங்களுக்கும் அடி விழ வைக்கிறேன் எனக் கூறி அம்பயரை நகைச்சுவையாக தாக்க முயன்றார். அதனை எதிர்பாராத அம்பயர் அவரைத் தடுத்தார். அதேபோன்று மேலும் தன் கையை வைத்தும் அம்பயரை தாக்க முயன்றார்.

இதையும் படிங்க : விராட் கோலியை விட அவர் விளையாடியதே வரலாற்றின் சிறந்த டி20 இன்னிங்ஸ் – கம்பீரின் கருத்தால் கலாய்க்கும் ரசிகர்கள்

அவரது இந்த கலாட்டாவான செயல் தற்போது வீடியோவாகவும், புகைப்படமாகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. களத்திற்கு வெளியே எப்பொழுதும் குறும்புத்தனமான வேலைகளில் ஈடுபடும் சாகல் தற்போது மைதானத்தின் நடுவில் அம்பயரிடமும் கலாட்டா செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement