2022 டி20 உலக கோப்பையில் அஷ்வினை செலக்ட் பண்ணது தப்பு தான், அவர் விளையாடிருக்கணும் – டிகே ஓப்பன்டாக்

Dinesh Karthik
- Advertisement -

2023 புத்தாண்டு கோலாகலமாக துவங்கியுள்ள நிலையில் இந்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது. அதற்கு முன்பாக ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் வென்று சரித்திரம் படைக்க தயாராகும் இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் சந்தித்த மனமுடைந்த இந்திய ரசிகர்களை மீண்டும் புத்துணர்ச்சியடைய வைக்கப் போராட உள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வழக்கம் போல லீக் சுற்றில் மிரட்டிய இந்தியா நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்திடம் 1 விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது.

Ravichandra Ashwin Rohit Sharma IND vs BAN

- Advertisement -

அந்த தொடரில் பேட்டிங் துறையில் விராட் கோலி, சூர்யகுமார் ஆகியோரை தவிர்த்து ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் பந்து வீச்சு துறையில் அரஷ்தீப் சிங் தவிர்த்து முகமது சமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதை விட தாக்கத்தை ஏற்படுத்தும் சுழல் பந்து வீச்சுத் துறையில் தமிழக மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆரம்பம் முதல் முழுமையாக வாய்ப்பு பெற்றார்.

அஷ்வினுக்கு பதில்:
ஆனால் பேட்டிங் துறையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே கடைசி பந்தில் சாதுரியமாக செயல்பட்டு வரலாற்று வெற்றியை பினிஷிங் செய்த அவர் வங்கதேசத்துக்கு எதிராகவும் கடைசி நேரத்தில் முக்கிய ரன்களை குவித்து வெற்றியில் பங்காற்றினார். இருப்பினும் தன்னுடைய முதன்மை வேலையான சுழல் பந்து வீச்சில் பெரும்பாலும் குறைவான ரன்களை எடுத்து சிறப்பாகவே செயல்பட்ட அவர் விக்கெட்டுகளை எடுக்க தவறியது தோல்வியை கொடுத்தது.

Chahal and Ashwin

முன்னதாக சமீப காலங்களாகவே இந்த பிரச்சனையை கொண்டுள்ள அவருக்கு பதிலாக 2022 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்து ஊதா தொப்பியை வென்று கம்பேக் கொடுத்த சஹால் விளையாட வேண்டும் என்ற கருத்துக்கள் நிலவியது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அஷ்வின் போன்ற ஆஃப் ஸ்பின்னரை விட சஹால் போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர் தான் உலகின் இதர அணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் 2022 டி20 உலக கோப்பையில் அஸ்வினுக்கு பதில் சஹால் விளையாடியிருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்று அந்த அணியில் விக்கெட் கீப்பராக விளையாடி சுமாராக செயல்பட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற முடிவுகளை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் குறிப்பிட்ட சில வீரர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் பெயரில் எடுப்பார்கள். உண்மையை சொல்ல வேண்டுமெனில் அஸ்வின் அந்த தொடரை மிகச் சிறப்பாக தொடங்கினார் ஆனால் சிறப்பாக ஃபினிஷிங் செய்யவில்லை. ஒருவேளை சஹால் விளையாடியிருந்தால் நிச்சயமாக எதிரணியில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பார்”

Dinesh-Karthik-1

“அது ஒரு சுவாரஸ்யமான தேர்வாக இருந்திருக்கும். குறிப்பாக நாம் எதிர்பார்த்த முடிவு வந்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். மொத்தமாக நாம் பார்க்கும் போது உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பையில் இந்திய அணியிலிருந்து நாம் அனைவரும் இன்னும் நல்ல முடிவுகளை எதிர்பார்த்தோம். மேலும் 2022 இந்தியாவுக்கு சுமாராகவே அமைந்தது. ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 1 – 0 முன்னிலைப் பெற்றும் பின்னர் தோற்றோம்”

இதையும் படிங்கயாரு சாமி இந்த பூமர் அன்கிள்?  இதுக்கு ரமீஸ் ராஜாவே பரவால்ல போல – புதிய தலைவரை கலாய்க்கும் பாக் ரசிகர்கள், நடந்தது இதோ

“அதே போல் ஆஸ்திரேலியாவில் கையிலிருந்த வாய்ப்புகளை ஊதி தள்ளி விட்டோம். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முதல் போட்டியில் அசத்திய நாம் 2வது போட்டியில் போராடி வென்றோம். அதே போல் இங்கிலாந்துக்கு எதிரான ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியிலும் சொதப்பியதால் கடந்த வருடம் இந்தியாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் சுமாராகவே அமைந்தது. எனவே நாம் வெற்றிப் பாதைக்கு திரும்ப நமது அணியில் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது” என்று கூறினார்.

Advertisement