டேட்டிங் பண்ண நேரமில்ல ஒரேடியா கல்யாணம் பண்ணிக்கலாமா? தனஸ்ரீ’யிடம் ப்ரபோஸ் செய்த கதையை பகிர்ந்த சஹால்

Chahal
- Advertisement -

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வென்ற சஹால் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி 2013 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது பயணத்தை துவக்கினார். அடுத்த சில வருடங்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக தொட்டாலே சிக்ஸர்கள் பறக்கக்கூடிய சின்னசாமி மைதானத்தில் தைரியமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்த காரணத்தால் 2016இல் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் 2017 முதல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்தார்.

Chahal

- Advertisement -

இருப்பினும் 2021 வாக்கில் ஃபார்மை இழந்து தடுமாறிய அவர் 2021 டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்படாத நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை வென்று ராஜஸ்தான் ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றி தற்போது மீண்டும் இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னராக விளையாடி வருகிறார். பொதுவாகவே இதர வீரர்கள் மட்டுமல்லாமல் எதிரணி வீரர்களையும் அம்பயர்களையும் கலாய்க்கும் வகையில் ஜாலியாக நடந்து கொள்ளக் கூடிய குணத்தை கொண்ட சஹால் கடந்த 2020 டிசம்பரில் தனஸ்ரீ எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நோ டேட்டிங்:
நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ள தனஸ்ரீ தமக்குத் தெரிந்த சிறந்த அசைவுகளை இணையத்தில் வீடியோவாக பதிவேற்றி புகழ் பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அவரை பார்த்த சஹால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஆரம்பத்தில் நடனம் கற்க வேண்டும் என்பதற்காக அவரிடம் 2 மாதங்கள் ஆன்லைன் நடன வகுப்பு பயிற்சிகளை கற்றுக் கொண்டதாக தெரிவிக்கும் சஹால் நாளடைவில் காதல் வயப்பட்டு நேரடியாக திருமணம் செய்து கொள்ளலாமா என்று ப்ரபோஸ் செய்ததாக கூறியுள்ளார்.

Chahal

குறிப்பாக அந்த சமயத்தில் 30 வயதை தொட்டுவிட்டதால் டேட்டிங் செய்வதற்கு நேரமில்லை என்று கூறியதாக தெரிவிக்கும் சஹால் நேரடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு தனஸ்ரீயிடம் கேட்டதாக கூறியுள்ளார். இருப்பினும் நேரில் பார்க்காமல் சம்மதம் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்த தனஸ்ரீ ஒருவழியாக நேரில் பார்த்த பின் குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கும் சஹால் தன்னுடைய அன்பு மனைவியை ப்ரபோஸ் செய்த ருசிகரமான நிகழ்வை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்தது பின்வருமாறு.

- Advertisement -

“லாக் டவுன் போடப்பட்ட சமயத்தில் நான் என்னுடைய குடும்பத்துடன் தங்கியிருந்தேன். குறிப்பாக நீண்ட நாட்கள் கழித்து குருகிராம் பகுதியில் முதல் முறையாக எங்களுடைய குடும்பத்துடன் தங்கியிருந்தேன். சுமார் 3 மாதங்கள் நீடித்த அந்த சுற்றுலாவை என்னுடைய குடும்பம் மற்றும் செல்லப்பிராணிகளுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் கழித்தேன். அந்த சமயத்தில் எப்போதுமே நடனத்தை கற்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்த நான் அதற்கான முயற்சிகளை எடுக்கலாம் என்று நினைத்தேன்”

Chahal

“அப்போது தான் தனஸ்ரீ ஆன்லைன் நடன வகுப்புகளை நடத்துவதாக சில பரிந்துரைகள் எனக்கு வந்தன. அதைத்தொடர்ந்து நான் 2 மாதங்கள் அந்த ஆன்லைன் வகுப்புகளை பின்பற்றினேன். அப்போது ஒருநாள் அவரிடம் “நீங்கள் ஏன் வாழ்க்கையில் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர் “நான் எப்போதும் இப்படி தான். சிறு சிறு விஷயங்களில் கூட மகிழ்ச்சியை எதிர்பார்ப்பேன்” என்று பதிலளித்தார். அப்போது அவர் எனக்கு சரியானவராக இருப்பார் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியதால் எனது குடும்பத்திடம் அதை தெரிவித்தேன்”

இதையும் படிங்க:வீடியோ : சரவெடியாக விளையாடி க்ளீன் போல்ட்டான ஜேசன் ராய் – அம்பயர்கள் ஸ்ட்ரிக்ட் தண்டனை, காரணம் இதோ

“அத்துடன் “நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். டேட்டிங் செய்ய விரும்பவில்லை” என்று அவரிடம் நேரடியாகவே கேட்டேன். ஏனெனில் அந்த சமயத்தில் 30 வயதை தொட்டிருந்த நான் மேற்கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆனால் அதற்கு முன் நாங்கள் நேரடியாக சந்தித்ததில்லை என்பதால் உடனடியாக அவர் முடியாது என்று தெரிவித்து விட்டார். இருப்பினும் ஒரு வழியாக மும்பையில் நேரில் சந்தித்த போது அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்” என்று கூறினார்.

Advertisement