வீடியோ : சரவெடியாக விளையாடி க்ளீன் போல்ட்டான ஜேசன் ராய் – அம்பயர்கள் ஸ்ட்ரிக்ட் தண்டனை, காரணம் இதோ

Jason Roy
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 26ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 36வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா தங்களது 3வது வெற்றியை பதிவு செய்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அதிரடியாக செயல்பட்டு 20 ஓவர்களில் 200/5 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஆண்ட்ரே ரசல் தவிர ஜேசன் ராய் 56 (29) நாராயண் ஜெகதீசன் 27 (29) வெங்கடேஷ் ஐயர் 31 (26) நிதிஷ் ராணா 48 (21) ரிங்கு சிங் 18* (10) டேவிட் வீஸ் 12* (3) என களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக நல்ல ரன்களை எடுத்தனர்.

பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக விஜயகுமார் மற்றும் வணிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 201 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு அதிரடியை துவக்க முயற்சித்த டு பிளேஸிஸ் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 17 (7) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சபாஷ் அகமது கிளன் மேக்ஸ்வெல் என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் அடுத்த களமிறங்கி அதிரடியாக செயல்பட்ட மஹிபால் லோம்ரர் 34 (18) ரன்களில் அவுட்டாக மறுபுறம் நங்கூரமாக விளையாடிய கேப்டன் விராட் கோலியும் 54 (37) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்.

- Advertisement -

அதிரடி தண்டனை:
அப்போது பிரபுதேசாய் 10 (9) ரன்களில் ரன் அவுட்டான நிலையில் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் 22 (18) ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் பெங்களூருவை 179/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றி பெற்ற கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அப்படி பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவுக்கு பெயருக்காக 83 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் மெதுவாகவே செயல்பட்ட தமிழக வீரர் நாராயண ஜெகதீசன் 4 பவுண்டரியுடன் 27 (29) ரன்களில் விஜய் குமார் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுபுறம் அவரை விட அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் 4 பவுண்டரி 5 சிக்சரை தெறிக்க விட்டு விரைவாக அரை சதமடித்து 56 (29) ரன்கள் குவித்த போது இளம் வீரர் விஜயகுமார் வீசிய 10வது ஓவரின் கடைசி பந்தில் ஆன் சைட் திசையில் சற்று ஒதுங்கி அடிக்க முயற்சித்தார். ஆனால் அவரது அசைவை கடைசி நேரத்தில் கணித்த விஜய் குமார் பந்தை கிட்டத்தட்ட ஒயிட் போல வீசி லெக் ஸ்டம்ப்பை பதம் பார்த்து க்ளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

அப்படி எதிர்பாராத வகையில் ஒயிட் போல வந்த பந்தில் அவுட்டானதால் கோபமடைந்த ஜேசன் ராய் ஏமாற்றத்துடன் கிழே விழுந்து மின்னிக் கொண்டிருந்த ஒரு பெய்ல்ஸை தனது பேட்டால் அடித்து விட்டு விரக்தியை வெளிப்படுத்திக் கொண்டே பெவிலியன் திரும்பினார். ஆனால் பொதுவாக எந்த சூழ்நிலையிலும் ஸ்டம்ப், பெய்ல்ஸ், பந்து போன்ற உபகரணங்களை சேதப்படுத்தக் கூடாது என்பது அடிப்படை விதிமுறையாகும். அதன் அடிப்படையில் அவருடைய இந்த செயலை போட்டியின் முடிவில் அம்பயர்கள் புகார் தெரிவித்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட ஐபிஎல் நிர்வாகம் 2.2 விதிமுறையை மீறிய ஜேசன் ராய்க்கு இந்த போட்டியின் சம்பளத்திலிருந்து 10% அபராதமாக விதிக்கப்படுவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது.

இதையும் படிங்க:IPL 2023 : காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து மொத்தமாக வெளியேறிய தமிழக வீரர் – ஹைதெராபாத் அணிக்கு பெரிய பின்னடைவு

முன்னதாக இந்த சீசனில் வெற்றிக்கு பின் ஹெல்மெட்டை தூக்கி எறிந்து வெறித்தனமாக கொண்டாடிய ஆவேஷ் கான், சென்னை வீரர் சிவம் துபே விக்கட்டை இழந்த போது வெறித்தனமாக கொண்டாடிய விராட் கோலி ஆகியோருக்கும் ஐபிஎல் நிர்வாகம் அதிரடியாக தண்டனை விதித்தது. அந்த வரிசையில் ஜேசன் ராய் தண்டனை பெற்றுள்ளதை பார்க்கும் ரசிகர்கள் என்ன இருந்தாலும் அம்பயர்கள் மற்றும் ஐபிஎல் நிர்வாகம் ஸ்ட்ரிக்ட்டாக நடந்து கொள்வதாக கடைமையை பாராட்டுகிறார்கள்.

Advertisement