கீழ விழுந்த சஹாலை சக வீரர்கள் கிண்டலடித்து சிரித்து மகிழ்ந்தினர்..! வீடியோ உள்ளே

kuldeep

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஜூலை 14) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த போதும் ஒரு சில சுவாரிசியமான நிகழ்வுகளும் நடந்ததேரியுள்ளது.


இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அணி 7 விக்கெட் இழப்பிற்க்ளு 322 ரன்களை எடுத்து.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 45 ரன்களும், ரெய்னா 46 எடுத்திருந்தனர்.

மேலும் , இந்த போட்டியில் இந்திய அணியின் சிறந்த பினிஷர் என்று கூறப்படும் தோனி மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி 59 பந்துகளில் 39 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.


தோனிக்கு பிறகு களமிறங்கிய இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் சஹால் 12 பந்துகளில் 12 ரன்களை அடித்து ஆட்டமிழ்ந்தார். இந்த போட்டியில் டேவிட் வில்லே வீசிய 48 வது ஓவரில் பௌண்டறி அடித்த சஹால் ஏதோ சதமடித்ததை போன்று தனது பேட்டை உயர்த்திக் காட்டி புன்னகைத்துக் கொண்டார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.