நாங்க வெயிட்டா இருந்தும் தோல்வியடைய இதுவே காரணம். ஆனா இம்முறை அப்படி நடக்காது – சாஹல் ஓபன் டாக்

Chahal
- Advertisement -

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பமானதில் இருந்து “இ சாலா கப் நமதே” என்று சொல்லி வரும் பெங்களூர் அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றியது இல்லை. உலகத் தரம் வாய்ந்த பல வீரர்களை அந்த அணி வைத்திருந்த போதும் கோப்பையை கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் யாதெனில் பேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே அந்த அணி அதிகம் நம்பியிருக்கிறது.

RCB

- Advertisement -

அவர்கள் இருவரும் அபாரமான பேட்ஸ்மேன்கள் என்பதில் துளியளவும் சந்தகேமில்லை அவர்கள் இருவருக்கும் நிகரானவர்கள் யாரும் இல்லை என்று கூட சொல்லலாம் ஆனால் அனைத்து நேரத்திலும் இவர்கள் இருவரையும் நம்பியே இருக்க முடியாது. மேலும் மிடில் ஆர்டரில் கை கொடுக்கும் வீரர்கள் இல்லை. இவர்கள் இருவரும் விக்கெட்டையும் விழித்தி விட்டால் பெங்களூர் அணி கதை முடிந்து விட்டது என்று எதிரணி நினைத்து விளையாடி வருகிறது. ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டரில் வெளிநாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஆனால் உள்நாட்டு வீரர்களை அவர்கள் சரியாக தேர்வு செய்வதில்லை. அதாவது சொல்லப்போனால் சென்னை மாதிரியான அணிகள் உள்நாட்டு வீரர்களுக்கு சமமான முக்கியத்துவத்தை கொடுக்கும் சென்னை அணியில் தோனி, ஜடேஜா, ராயுடு, கேதார் ஜாதவ், ரெய்னா போன்ற இந்திய நட்சத்திரங்கள் விளையாடி வருகிறார்கள். ஆனால் பெங்களூர் அணியில் கோலி மற்றும் சாஹல் ஆகியோரைத் தவிர உள்நாட்டு பிரபலங்கள் யாரும் இல்லை. உமேஷ் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருந்தாலும் அவர்கள் கைகொடுக்கும் விதமாக இதுவரை செயல்படவில்லை.

rcb 2

இந்த சில குறைகளே பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு அணியின் தோல்விக்கான காரணம் குறித்து மும்பை செல்லும் முன் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஆர்சிபி அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறுகையில் : எங்கள் அணி 30 சதவீத போட்டிகளில் தோல்வி அடைவதற்கு காரணம் சரியான பவுலர் இல்லாததுதான் என்று தெரிவித்திருந்தார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

16 – 17 ஓவர்கள் வரை நாங்கள் டைட் செய்து நாங்கள் கட்டுப்படுத்தி வீசினாலும் கடைசி 3 ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் எளிதாக பவுலர்கள் விட்டு கொடுக்கின்றனர். அதனாலேயே பெங்களூர் அணி பல போட்டிகளில் தோல்வியை எதிர் கொண்டது. ஆனால் இம்முறை பவுலிங்கில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. நாங்கள் விரைவில் அதற்கு தீர்வு காண்போம் என்று சொல்லி உள்ளார். அவர் கூறியபடி ஆர்.சி.பி 200 ரன்கள் அடித்தும் பல போட்டிகளில் அவர்கள் தோல்வி அடைந்ததை நாம் கொண்டிருக்கிறோம்.

எனவே அவர் கூறியபடி அந்த கூற்று உண்மை தான். சரியான டெத் பௌலிங் அமைந்திருந்தால் அவர்கள் நிச்சயம் பல போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும். இம்முறை பேட்டிங்கில் மட்டுமின்றி பவுலிங்கிலும் பெங்களூரு அணியின் சிறப்பாக செயல்படும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இம்முறையும் பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றும் ஒரு அணியாகவே பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணி தனது முதல் போட்டியில் 21ம் தேதி சன் ரைசர்ஸ் அணியுடன் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement