பாண்டியவை பழிவாங்க துடிக்கும் இளம் வீரர்…துப்பாக்கி சுடும் பயிற்சியில் மும்முரம்…யார் தெரியுமா ? – வீடியோ உள்ளே

chahal6
- Advertisement -

துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுவரும் சாஹல் பயிற்சி முடிந்ததும் தனது முதல் இலக்கு பாண்டியா தான் என்று டிவீட் செய்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். அந்த டீவீட்டுடன் தான் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோவையும் இணைத்துள்ளார் சாஹல்.
chahal
கிரிக்கெட் உலகில் சகவீரர்கள் அவ்வப்போது நெருங்கிய நண்பர்களாக இருப்பது வழக்கம். அந்தவகையில் தற்போதைய இந்திய அணியின் இளம் வீரர்களான பாண்டியா,குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

தற்போது ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக சாஹல் பொழுதுபோக்காக துப்பாக்கி சுடும் பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார். டிவிட்டரில் தான் துப்பாக்கி சுடும் பயிற்சியை வீடியோவாக பதிந்துள்ள சாஹல் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக குறி வைப்பது பற்றிய சில பயிற்சிகளை எடுத்து வருகின்றேன். பயிற்சி முடிந்தவுடன் நான் துப்பாக்கியில் குறிவைத்து சுடப்போகும் நபர் ஹர்திக் பாண்டியா தான்” என்றும் எழுதியுள்ளார்.

- Advertisement -

ஹர்திக்பாண்டியா சக வீரர்களை கிண்டலடித்து பேசுவதில் கில்லாடி. அப்படித்தான் ஒருமுறை தனது நெருங்கிய நண்பனான சாஹலின் மெலிதான உடம்பை காரணம் காட்டி இவன முதல்ல ஜிம்முக்கு அனுப்பனும் என்று கிண்டலடித்தார்.

அந்த கமெண்ட்டை மனதில் வைத்தே அதற்கு பதிலடி தரும் வகையில் விளையாட்டாக பதிலுக்கு பாண்டியாவை தான் மொதலில் சுடுவேன் என்று டிவீட் செய்துள்ளார்.தற்போது ரசிகர்கள் பலரும் அந்த டிவீட்டில் பாண்டியா மற்றும் சாஹலை கிண்டலடித்து வருகின்றனர்.தற்போது பாண்டியாவின் துப்பாக்கி சுடும் வீடியோவும் வைரலாகி வருகின்றது.

Advertisement