ஐ.பி.எல் தொடரில் அசத்திய யுஸ்வேந்திர சாஹல் தற்போது சிரமப்பட என்ன காரணம்? – நிபுணர்கள் கருத்து இதோ

Chahal
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் சூழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று விளையாடி வருகிறார். ஆனாலும் கடந்த ஆண்டு அவரது மோசமான பார்ம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ராகுல் சாஹருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்திய அணியில் தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் ஐபிஎல் தொடரில் யுஸ்வேந்திர சாஹல் களமிறங்கினார்.

Chahal

- Advertisement -

அப்படி விளையாடிய அவர் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் சாஹல் தற்போது விக்கெட்டுகளை வீழ்த்த ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அவரது பந்துவீச்சு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

இந்திய அணியில் அவருடைய பணியே ரன்களை குறைவாக விட்டுக் கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தும் ஒரு விக்கெட் டேக்கிங் பவுலராக இருப்பது மட்டுமே. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த தொடரில் அவர் ரன்களை மட்டுமே அதிக அளவில் விட்டுக் கொடுத்தார். அதுதவிர விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவிற்கு பந்து வீசவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட்ட சாஹல் இப்படி சமீப காலமாகவே சொதப்பி வருவதற்கு என்ன காரணம் என்பது குறித்து கிரிக்கெட் நிபுணர்கள் சில கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்.

Yuzvendra-Chahal

அதன்படி பெரும்பாலான நிபுணர்கள் கூறுகையில் : லெக் ஸ்பின்னர்கள் சற்று வேகத்தை குறைத்து வீச வேண்டும். ஆனால் சாஹல் கூடுதல் வேகத்துடன் பந்து வீசுகிறார். அதோடு ஸ்டம்பை நோக்கி பந்துவீச வேண்டும். ஆனால் யுஸ்வேந்திர சாஹல் அப்படி செய்யாமல் பந்தினை நன்றாக காற்றில் தூக்கி எறிந்து பேட்ஸ்மன்கள் பேட்டை சுழற்றும் அளவிற்கு இடம் கொடுத்து வீசி வருகின்றார். இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் எளிதில் அவரது பந்தினை கனித்து இறங்கி வந்து சிக்ஸர்களை விளாசுகின்றனர்.

- Advertisement -

ஆனால் இப்படி பந்துகளை பிளைட் செய்து வீசக்கூடாது என்றும் பந்துகளை ஸ்டம்ப்பை நோக்கி வீசினாலே நிச்சயம் அவருக்கு விக்கெட் கிடைக்கும் என்று கூறுகின்றனர். அதோடு லெக் ஸ்பின்னரான இவர் சில சமயம் கூக்ளி பந்துகளையும் வீச வேண்டும். ஆனால் சாஹல் காற்றில் பந்துதூக்கி எறிவதோடு சற்று வேகத்துடன் மட்டுமே பந்துவீசி வருகிறார். அது தவிர்த்து வேறு எந்த வெறியேஷன்களுடனும் அவர் பந்துவீசுவது இல்லை என்பதனாலே அவருக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

இதையும் படிங்க : IND vs AUS : ஒரு கவலை தீர்ந்தது, டி20 உ.கோ இடத்தை அவர் கன்பார்ம் பண்ணிட்டாரு – சபா கரீம் பாராட்டு

இப்படி சாஹல் தொடர்ச்சியாக சொதப்பி வரும் வேளையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு சுழற்ப்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோயை அணியில் சேர்க்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அவர் பந்தை மெதுவாக வீசுவது மட்டுமின்றி அதிகளவு கூக்ளி பந்துகளையும் பயன்படுத்தக்கூடியவர் என்பதனால் சாஹலின் இடம் வெகுவிரைவில் அவருக்கு செல்லவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement