IND vs NZ : இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட யுஸ்வேந்திர சாஹல் – புவியின் சாதனை முறியடிப்பு

Yuzvendra-Chahal
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே ராஞ்சி நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்து அணியானது இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND-vs-NZ

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது லக்னோ மைதானத்தில் ஜனவரி 29-ஆம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று துவங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து வெறும் 99 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

Chahal 1

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் இரண்டு ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டன் உட்பட 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

- Advertisement -

அவர் வீழ்த்திய இந்த விக்கெட் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய பவுலராக அவர் மிகப்பெரிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இதற்கு முன்னதாக இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக 90 விக்கெட்டுகளுடன் புவனேஸ்வர் குமார் முதலிடத்தில் இருந்தார். இந்த 90 விக்கெட்டுகளை வீழ்த்த அவர் 87 போட்டிகளை எடுத்துக் கொண்டார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான், இலங்கை தொடாத மைல்கல் – ஒட்டுமொத்த சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஆசிய அளவில் புதிய வரலாறு படைத்த இந்தியா

அதேவேளையில் இன்று தனது 75-வது போட்டியில் விளையாடிய வரும் யுஸ்வேந்திர சாஹல் 91 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement