முடிவுக்கு வந்த யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா திருமண வாழ்க்கை – கைமாறிய கோடிகள்

Chahal
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் 160 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 205 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஜீவனாம்சமாக பெரிய தொகையை கேட்ட சாஹலின் மனைவி :

இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்த ஆரம்ப கட்டத்தில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த அவர் கடந்த 2023-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டுள்ளார். தற்போது 34 வயதை எட்டியுள்ள அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

கடந்த சீசனில் அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணியானது 18 கோடி ரூபாய் என்கிற பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. இப்படி ஒரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்படுவது இதுவே முதல்முறை.

கடந்த 2020-ஆம் ஆண்டு தனஸ்ரீ வர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் அதற்கு அடுத்து சில ஆண்டுகள் அவருடன் உலகெங்கும் பயணித்து வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், அதன்காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பேசப்பட்டு வந்த வேளையில் இருவருமே அதிகாரபூர்வமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியதாக தகவல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

அந்த வகையில் அவர்கள் இருவருமே பரஸ்பர விவாகரத்து பெற விண்ணப்பித்ததாகவும் கிட்டத்தட்ட அந்த முடிவு தற்போது உறுதியாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 5-ஆம் தேதி மும்பையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் அவர்களது விவாகரத்து வழக்கு நடைபெற்று முடிந்த வேளையில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதலில் தாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக இருவருமே ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது தனஸ்ரீ வர்மா சாஹலிடம் இருந்து விவாகரத்து கேட்டபின் ஜீவானம்சமாக 4 கோடியே 75 லட்ச ரூபாய் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா ஆப்சென்ட்.. முதல் போட்டிக்கான கேப்டனை அறிவித்த மும்பை இந்தியன்ஸ் – ரோஹித் கிடையாது

அதற்கு ஒப்புக் கொண்டுள்ள யுஸ்வேந்திர சாஹல் ஏற்கனவே 2 கோடியே 37 லட்சத்தை கொடுத்து விட்டதாகவும், மீதமுள்ள 2 கோடியே 38 லட்சத்தை விவாகரத்துக்கு பின் வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளார். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகள் அவர்கள் பிரிந்தே வாழ்ந்து வந்துள்ளனர் என்று தரவுகள் கூறுகிறது.

Advertisement