Yuvraj Singh : பிரியாவிடை போட்டி தர விரும்பிய பி.சி.சி.ஐ – அதனை மறுத்த யுவராஜ்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் நேற்று பத்திரிக்கை

yuvraj1
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது : நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி அது எனது அதிர்ஷ்டம்.

yuvraj 3

- Advertisement -

பல போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன். அதில் நிறைய போட்டிகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும் மறக்க முடியாத போட்டிகள் யாவும் இருக்கின்றன. அந்த வகையில் 2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பையின் இறுதி போட்டி என்னால் மறக்க முடியாத போட்டிகளாகும் என்றும் கூறினார்.

இந்நிலையில் தற்போது யுவராஜ் சிங் ஓய்வு குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன் படி யுவராஜ் சிங்கிற்கு உலக கோப்பைக்கு பிறகு ஒரு தொடரில் ஆட வைத்து பிரியா விடை கொடுக்க பி.சி.சி.ஐ நிர்வாகம் விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி யுவராஜ் இந்திய அணியில் பங்கேற்க வேண்டும் என்றால் அவர் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இந்த விடயம் யுவராஜின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் யுவராஜ் பிசிசிஐயின் இந்த வாய்ப்பை மறுத்தார்.

Yuvraj

அதன் காரணத்தையும் யுவராஜ் தற்போது தெரிவித்துள்ளார். நான் நன்றாக ஆடும்போது பிரியா விடை போட்டி கொடுத்திருந்தால் நான் கடைசி போட்டியில் பங்கேற்று விளையாடி இருப்பேன். ஆனால் நான் நன்றாக ஆடவில்லை என்னை அணியில் இருந்து நீக்கினார்கள். நான் ஒரு போதும் என்னை ஒரு போட்டியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டு கிரிக்கெட் விளையாட மாட்டேன்.

yuvraj 2

நான் இத்தனை ஆண்டு காலமும் கிரிக்கெட்டை மனதார நேசித்து விளையாடி வந்தேன். அதனால் என்னால் மிகச் சிறப்பாக விளையாட முடிந்தது. தற்போது அவர்கள் வாய்ப்பளித்து விளையாட நான் விரும்பவில்லை. மேலும் இப்போது நான் இத்தனை ஆண்டுகள் காதலித்த கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெற விரும்பி விட்டேன். எனவே பி.சி.சி.ஐ நிர்வாகத்தின் பிரியா விடை போட்டி எனக்கு வேண்டாம் எனக்கு ரசிகர்களின் ஆதரவும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துக்களும் ஆதரவும் மட்டும் போதும் என்று யுவராஜ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement