அடிக்கமுடியவில்லை என்று அவுட் ஆகாமலே வெளியேறிய யுவராஜ் சிங்- வீடியோ ஆதாரம் இதோ

- Advertisement -

கனடாவில் குளோபல் டி20 தொடரில் யுவராஜ் சிங் டொராண்டோ நேஷனல் அணிக்காக கேப்டனாக விளையாடி வருகிறார். இந்த தொடரில் முதல் போட்டியில் டொராண்டோ நேஷனல் மற்றும் வான்கூவர் நைட் ஆகிய அணிகள் மோதின.

Yuvraj

- Advertisement -

இந்தப் போட்டியில் வான்கூவர் அணியின் கேப்டன் கிரிஸ் கெய்ல் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி துவக்க வீரர்களாக களமிறங்கிய மெக்கல்லம் 4 ரன்களிலும் மெக்லியாட் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். நான்காவதாக யுவராஜ் சிங் களமிறங்கினார். இந்நிலையில் களம் இறங்கியது முதல் விளையாட தடுமாறிய யுவராஜ் சிங் 27 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

அவரால் பந்துகளை அடிக்க முடியவில்லை. எனவே ஸ்பின்னர் ஒருவர் வீசிய பந்தில் அடிக்க முயன்ற யுவராஜ் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். ஆனால் இந்த ஸ்டம்பின் மூலம் யுவராஜ் அவுட் ஆகவில்லை. ஆனால் இவரை அடிக்க முடியவில்லையே என்று விரைவில் வெளியேறியது போல் இது போன்று தோன்றுகிறது. இதோ அந்த வீடியோ :

ஏனெனில் அவர் வெளியேறிய பின்பு ரீபிளேவில் யுவராஜ் அவுட் ஆகவில்லை என்றும் அவர் தானாக வெளியேறியது அந்த வீடியோவின் மூலம் அம்பலமானது. இதனால் யுவராஜ் மூலம் அடிக்க முடியவில்லை என்று நினைத்துக் கொண்டு வெளியேறினரா ? என்ற குழப்பம் நிலவி வருகிறது.

Advertisement